முகப்பு
கிரிக்கெட்

உலகக் கோப்பை வென்று 50 ஆண்டுகள் நிறைவு! விழாவாகக் கொண்டாடும் மே.இ.தீவுகள்!

உலகக் கோப்பை வென்று 50 ஆண்டுகள் நிறைவு! விழாவாகக் கொண்டாட மே.இ.தீவுகள் அணி முடிவு!

Updated On : 3 ஏப்ரல் 2025, 5:58 pm IST
1975 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற மேற்கிந்திய தீவுகள்..
பகிர்:

முன்னாள் உலகச் சாம்பியனான மேற்கிந்திய தீவுகளின் உலகக் கோப்பையை வென்று 50 ஆண்டுகள் நிறைவடையவுள்ளதை ஒட்டி அதை விழாவாகக் கொண்டாட அந்த அணி நிர்வாக முடிவெடுத்துள்ளது.

1975 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதல்முறையாக கோப்பையை வென்றது. அந்தப் போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் கேப்டன் கிளைவ் லாய்ட் சதம் விளாசியிருந்தார்.

இதுபற்றி மேற்கிந்திய தீவுகள் அணியின் நிர்வாக செயல் இயக்குநர் கிறிஸ் டேஹ்ரிங் கூறுகையில், “இதை விழாவாகக் கொண்டாடவிருப்பது உண்மைதான். இன்னும் தேதி குறித்து முடிவு செய்யவில்லை. அதுபற்றி விரைவில் அறிவிப்போம்” என்றார்.

Advertisement

Advertisement

ஜூன் 25 ஆம் தேதி பார்படாஸில் ஆஸ்திரேலியாவுடான டெஸ்ட் போட்டியின் போது இந்தக் கொண்டாட்டங்கள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுக்கிறது.

இதையும் படிக்க: சிஎஸ்கே அணியில் விளையாட 17 வயது மும்பை வீரருக்கு அழைப்பு!

அப்போதைய மேற்கிந்திய தீவுகள் அணியில் இருந்த கோர்டன் கிரீனிட்ஜ்(73), ஆல்வின் கல்லிசரண் (76), ரோஹன் கன்ஹாய் (89), கிளைவ் லாயிட் (80), விவ் ரிச்சர்ட்ஸ் (73), பெர்னார்ட் ஜூலியன் (75), டெரிக் முர்ரே (81), வான்பர்ன் ஹோல்டர் (79), ஆண்டி ராபர்ட்ஸ் (74), கோலிஸ் கிங் (73), லான்ஸ் கிப்ஸ் (90) மற்றும் மாரிஸ் ஃபாஸ்டர் (81) ஆகியோர் மட்டுமே தற்போது உயிருடன் இருக்கின்றனர்.

இவர்களைத் தவிர்த்து ரோஹன் ஃப்ரெர்டிக் 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தனது 57 வயதிலும், கெய்த் பிராய்ஸ் 1996 ஆம் ஆண்டு தனது 53 ஆவது வயதிலும் மரணமடைந்தனர். அப்போதைய அணியிலிருந்த ஜாம்பவான் வீரர்கள் இந்த விழாவில் சிறப்பிக்கப்படவுள்ளனர்.

இதையும் படிக்க: சச்சின் பதிவை 1,000 முறை படித்த ஷஷாங் சிங்..! இன்ஸ்டா பயன்பாட்டினை குறைக்க அறிவுறுத்திய கேப்டன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments