சூப்பர் கோப்பையை வென்று ஐரோப்பிய வரலாற்றில் இடம்பிடித்தது பிஎஸ்ஜி!
பிஎஸ்ஜி அணி சூப்பர் கோப்பையை வென்று வரலாற்றில் இடம் பிடித்தது குறித்து...
பிஎஸ்ஜி (பாரிஸ் ஜெயண்ட் ஜெர்மன்) என்ற பிரான்ஸின் கிளப் அணி சூப்பர் கோப்பையை வென்று ஐரோப்பிய வரலாற்றில் இடம்பிடித்து அசத்தியுள்ளது. தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக வென்ற இரண்டாவது அணி என்ற சாதனையும் படைத்துள்ளது.
சூப்பர் கோப்பை போட்டி என்பது சாம்பியன்ஸ் லீக் வெற்றியாளர் (பிஎஸ்ஜி) - ஐரோப்பா லீக் வெற்றியாளர் (ஆஸ்டன் வில்லா) இருவருக்கும் நடைபெறும் சீசனில் முதல் சாம்பியன்ஷிப் ஆட்டமாகும்.
ஆஸ்திரியாவில் கிளெஸ்ஹெய்ம் திடலில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் பிஎஸ்ஜி அணி 2-1 என வென்றது. இந்தப் போட்டியில் பிஎஸ்ஜியின் நட்சத்திர வீரர் கவரெட்ஸ்கேலியா 20ஆவது நிமிஷத்திலும் டியோ 61ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்தார்கள்.
Advertisement
Advertisement
ஆஸ்டன் வில்லா அணிக்கு பிரையன் மட்ஜோ 45ஆவது நிமிஷத்தில் ஒரு கோல் அடித்தார். இந்தப் போட்டியில் 58 சதவிகித நேரம் பிஎஸ்ஜி அணியினர் பந்தை தங்கள் வசம் வைத்திருந்தனர்.
இந்தப் போட்டியில் பிஎஸ்ஜி அணியினர் 586 முறை பந்தை பாஸ் செய்து அசத்தினர். இதில் 89 சதவிகிதம் துல்லியமான செய்ததும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ரியல் மாட்ரிட் அணி 2016, 2017 ஆகிய சீசன்களில் தொடர்ச்சியாக சூப்பர் கோப்பையை வென்றிருந்தது. தற்போது, பிஎஸ்ஜி இந்த சாதனையில் இணைந்து அசத்தியுள்ளது.
PSG won the Super Cup and secured a place in European history!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.