சாம் கரணை வாங்கியது ஏன்? லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளக்கம்!
இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் சாம் கரணை டிரேடிங் முறையில் வாங்கியது குறித்து லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் இயக்குநர் விளக்கமளித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் சாம் கரணை டிரேடிங் முறையில் வாங்கியது குறித்து லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் இயக்குநர் டாம் மூடி விளக்கமளித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கடந்த சீசனில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வந்த இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி, தற்போது டிரேடிங் முறையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து சாம் கரண் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸில் இணைந்தார்.
இந்த நிலையில், சாம் கரணை லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வாங்கியதற்கான காரணத்தை அந்த அணியின் இயக்குநர் டாம் மூடி தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக அவர் பேசியதாவது: அண்மையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் டிரேடிங்கில் ஈடுபட்டு முகமது ஷமி மற்றும் மணிமாறன் சித்தார்த்தை அவர்களுக்குக் கொடுத்து, லக்னௌ அணிக்கு சாம் கரணை வாங்கினோம். நாங்கள் மிகவும் கனத்த இதயத்துடனே முகமது ஷமியை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு கொடுத்தோம். அவர் மிகவும் சிறந்த பந்துவீச்சாளர். ஆனால், லக்னௌ அணியில் பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ், மோஷின் கான், ஆகாஷ் சிங் மற்றும் அர்ஜுன் டெண்டுல்கர் போன்ற பந்துவீச்சாளர்கள் உள்ளார்கள்.
எங்களிடம் பந்துவீச்சு தெரிவுகள் நிறைய இருப்பதால், 6-வது அல்லது 7-வது இடத்தில் களமிறங்கி விளையாடக் கூடிய ஆல்ரவுண்டர் தேவைப்பட்டார். சாம் கரண் அணியில் இணைந்துள்ளதால், அவரால் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே அணிக்கு வலு சேர்க்க முடியும். அவரால் மிடில் ஆர்டரில் எங்கு வேண்டுமானாலும் களமிறங்கி விளையாட முடியும். அவரைப் போன்ற ஒரு ஆல்ரவுண்டரைத்தான் லக்னௌ அணி தேடிக் கொண்டிருந்தது என்றார்.