FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

இங்கிலாந்தை வீழ்த்தி டி20 தொடரை முழுமையாக கைப்பற்றிய ஆஸ்திரேலியா!

மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்தை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி டி20 தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது.

Updated On : 25 ஜனவரி 2025, 7:13 pm IST
பகிர்:

மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்தை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி டி20 தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி அடிலெய்டில் இன்று (ஜனவரி 25) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

பெத் மூனி அசத்தல்

Advertisement

Advertisement

முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீராங்கனை பெத் மூனி அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 63 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 10 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஜியார்ஜியா 23 ரன்களும், ஃபோப் லிட்ச்ஃபீல்டு மற்றும் எல்லிஸ் பெரி தலா 12 ரன்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் லின்சி ஸ்மித், ஃப்ரேயா கெம்ப், சார்லி டீன், சோஃபி எக்கல்ஸ்டோன் மற்றும் அலைஸ் கேப்ஸி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி, 17.3 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 90 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் கேப்டன் ஹீதர் நைட் அதிகபட்சமாக 38 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, டேனியல் வியாட் ஹாட்ஜ் 17 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஆஸ்திரேலியா தரப்பில் ஜியார்ஜியா வேர்ஹம் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டார்ஸி பிரௌன் 2 விக்கெட்டுகளையும், மேஹன் சூட், அலானா கிங், அன்னாபெல் சதர்லேண்ட் மற்றும் தஹிலா மெக்ராத் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 என முழுமையாக கைப்பற்றியது. பெத் மூனி ஆட்ட நாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments