FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பையுடன் ஹோலி கொண்டாட்டம் கோலாகலம்!

ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பையுடன் ஹோலி கொண்டாட்டம் களைகட்டியது.

Updated On : 14 மார்ச் 2025, 3:02 pm IST
உலகக் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ரசிகர்கள்...
பகிர்:

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உலகக் கோப்பையுடன் ஹோலி கொண்டாட்டம் களைகட்டியது.

வட இந்தியாவில் பெரியளவில் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஊர்வலங்கள் நடத்தப்படும். ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளைத் தூவி கொண்டாடத்தில் ஈடுபடுவர். வட இந்தியா மட்டுமின்றி நாடு முழுவதும், ஏன் உலங்கெங்கிலும் உள்ள இந்தியர்கள் இந்தப் பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிக்க: புலிகளின் புலி: தில்லி கேப்டனாக அக்‌ஷர் படேல்!

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மெல்பர்னில் வாழும் இந்தியர்களுக்காக ஹோலி பண்டிகை கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியா வென்ற உலகக் கோப்பையுடன் சுய புகைப்படம் எடுத்துக்கொள்ள அனைவருக்கும் வழங்கியுள்ளது.

அதுமட்டுமின்றி, பிக் பாஷ் லீக் மற்றும் மகளிர் பிக் பாஷ் போட்டிகளுக்கான பொருள்கள், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொப்பிகள் உள்ளிட்ட பரிசுப் பொருள்களையும் வழங்கி ஹோலி கொண்டாட்டங்களை மேலும் வண்ணமயமாக்கியிருக்கிறது ஆஸ்திரேலிய கிரிகெட் வாரியம்.

இதையும் படிக்க: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தவறவிடும் இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments