முகப்பு
கிரிக்கெட்

மிரட்டிய டிராவிஸ் ஹெட்: விராட் கோலி அளித்த பரிசால் சதமடித்த நிதீஷ் ரெட்டி!

இந்தியாவின் ஆல்-ரவுண்டர் ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரருமான நிதீஷ் ரெட்டி அளித்த பேட்டி...

Updated On : 20 மார்ச், 2025 at 6:03 PM
நிதீஷ் குமார் ரெட்டி - படம்: எக்ஸ் / சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.
பகிர்:
Updated On : 20 மார்ச், 2025 at 5:28 PM

இந்தியாவின் ஆல்-ரவுண்டர் நிதீஷ் ரெட்டி பூமா பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் அளித்த பேட்டியில் விராட் கோலி தனக்கு அளித்த பரிசு குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.

கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதால் பிஜிடி தொடரில் நிதீஷ் ரெட்டி தேர்வானார். சிறப்பாக விளையாடிய நிதீஷ் ரெட்டி மெல்போர்னில் சதம் அடித்து அசத்தினார்.

3-1 என் இந்திய அணி தோற்றாலும் நிதீஷ் ரெட்டி மாதிரியான நபர்கள் வெளியே தெரிந்தார்கள்.

Advertisement

இந்நிலையில் நிதீஷ் ரெட்டி பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கூறியதாவது

Updated On : 20 மார்ச், 2025 at 5:57 PM

கோலி அளித்த பரிசு

ஓய்வறையில் விராட் கோலி சர்பராஸ் கானிடம் உன்னுடைய காலணியின் எண் என்ன? எனக் கேட்டார். அதற்கு அவர் ’9’ எனவே, கோலி திரும்பி என்னைப் பார்த்தார். நான் ’10’ என்றேன். அவர் என்னிடம் கொடுத்தார்.

விராட் கோலியின் காலணி எனக்கு சரியாக இருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால், அவரது காலணியை அணிய நான் விரும்பினேன்.

அடுத்த போட்டியில் அந்தக் காலணியுடன்தான் விளையாடினேன். அதில்தான் சதமடித்தேன்.

Updated On : 20 மார்ச், 2025 at 5:57 PM

அப்பா அழுகை, கோலி வாழ்த்து

ஓய்வறையில் அனைவரும் வந்து எனக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். ஆனால், நான் விராட் கோலிக்காக காத்திருந்தேன்.

கடைசியாக விராட் கோலி என்னிடம் வந்து சிறப்பான ஆட்டத்தை ஆடியதாகக் கூறினார். அந்தக் கணம் எனக்கு சிறப்பானதாக இருந்தது.

நானும் எனது அப்பாவை திடலில் தேடினேன். கிடைக்கவில்லை. பிறகு, திரையில் அவர் அழுதுகொண்டிருந்தார்.

Updated On : 20 மார்ச், 2025 at 5:57 PM

மிரட்டிய டிராவிஸ் ஹெட்

டிராவிஸ் ஹெட் என்னிடம் வந்து ‘நிதீஷ் இன்று எங்கு பார்டிக்கு செல்கிறாய்? எனக் கேட்டார். நான் எங்குமே செல்ல மாட்டேன் எனத் தெரிந்தும் அவர் அப்படிக் கேட்டார்.

ஆஸி. சிறந்த இடம். மெல்போர்ன் அற்புதமான இடம். நீங்கள் அங்கு சென்று ஜாலியாக இருக்கலாம். டிராவிஸ் என்னை திசைத் திருப்ப வந்திருந்தார். ஆனால், நான் ‘டிராவிஸ் ஒருநாள் நீங்களும் நானும் ஒன்றாக போகலாம்’ என்றேன்.

ஒருமுறை ஃபீல்டிங்கின் போது ‘நிதீஷ் நீ இப்போது அடித்தால். நானும் உனது ஓவரில் அடிப்பேன்’ என மிரட்டினார்.

Updated On : 20 மார்ச், 2025 at 5:57 PM

வேறு அணிகள் என்னை அழைத்தது... ஆனால்

எனக்கு வேறு அணியிலும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், எனக்கு சன்ரைசர்ஸ் அணிதான் எனக்கு குடும்பம் மாதிரி இருக்கிறது. உங்களது சொந்த அணியை பிரதிநிதிப்படுத்துவதால் அணிக்கு தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

நன்றாக விளையாடி மீண்டும் ஐபிஎல் கோப்பையை எங்கள் அணிக்கு கொண்டு வருகிறேன். அணியும் என் மீது அதிகமான நம்பிக்கையை வைத்துள்ளது. மற்ற அணிகளுக்கு வேண்டாம் எனக் கூறுவது கடினம்தான். ஆனால், நான் சன்ரைசர்ஸ் அணியில் விளையாடவே விரும்புகிறேன்.

தெலுங்கில் பேசும்போது அனைவரும் என்னை அவர்களது சகோதரர்களாகவே நினைத்து பேசுகிறார்கள். சொந்த அணிக்கு விளையாடுவதால் இந்த நன்மைகள் இருக்கின்றன. ஆரஞ்சு ஆர்மி பெருத்த ஆதரவை தருகிறார்கள். திடலில் ஆரஞ்சு கொடிகளாக நிறைந்து இருக்கும். அந்த ஆற்றலை நாங்கள் மிகவும் நேசிக்கிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.