சர்வதேசப் போட்டிகளில் ரோஹித் சர்மா - விராட் கோலி இணை புதிய சாதனை!
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி புதிய சாதனைப் படைத்துள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி புதிய சாதனைப் படைத்துள்ளனர்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லார்ட்ஸ் திடலில் இன்று (ஜூலை 19) நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருப்பதால், இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றும்.
இந்தப் போட்டி இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இணைந்து விளையாடும் 400-வது சர்வதேசப் போட்டியாகும். மேலும், 400 சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் முதல் இந்திய வீரர்கள் இணை என்ற சாதனையையும் இவர்கள் படைத்துள்ளனர்.
Advertisement
Advertisement
முன்னதாக, இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் இணைந்து இந்திய அணிக்காக 391 போட்டிகளில் விளையாடியிருந்ததே இதுவரையிலான சாதனையாக இருந்தது. தற்போது, அந்த சாதனையை ரோஹித் சர்மா - விராட் கோலி இணை முறியடித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் 48,574 ரன்கள் மற்றும் 135 சதங்கள் விளாசியுள்ளனர். டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து இருவரும் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
Senior Indian cricketers Rohit Sharma and Virat Kohli have set a new record in international cricket.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.