விராட் கோலி சதம்; ரோஹித், கே.எல்.ராகுல் அரைசதம்; தென்னாப்பிரிக்காவுக்கு 350 ரன்கள் இலக்கு!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 349 ரன்கள் எடுத்துள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 349 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டி ராஞ்சியில் இன்று (நவம்பர் 30) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது.
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 18 ரன்களில் ஆட்டமிழக்க, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிரடியாக ரன்கள் குவித்தது.
Advertisement
Advertisement
கோலி சதம்; கே.எல்.ராகுல், ரோஹித் அரைசதம்!
சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா 51 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். மறுமுனையில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 102 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். ஒருநாள் போட்டிகளில் விராட் கோலியின் 52-வது சதம் இதுவாகும்.
சதம் விளாசிய பிறகு விராட் கோலி சிக்ஸர்கள் விளாசி அதிரடியாக ரன்கள் குவித்தார். இருப்பினும், அவர் 120 பந்துகளில் 135 ரன்கள் எடுத்து, நண்ட்ரே பர்கர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதில் 11 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும்.
விராட் கோலியுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் கே.எல்.ராகுல் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 56 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
ரவீந்திர ஜடேஜா 20 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 13 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 8 ரன்களும் எடுத்தனர். இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 349 ரன்கள் எடுத்துள்ளது.
தென்னாப்பிரிக்கா தரப்பில் மார்கோ யான்சென், நண்ட்ரே பர்கர், கார்பின் போஸ்ச் மற்றும் ஓட்னில் பார்ட்மேன் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி களமிறங்குகிறது.
Batting first in the first ODI against South Africa, the Indian team scored 349 runs for the loss of 8 wickets.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.