FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

43 வயதிலும் நிற்காத வேகம்..! 5 விக்கெட்டுகள் எடுத்த ஆண்டர்சன்!

முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் குறித்து...

விக்கெட் வீழ்த்திய ஜேம்ஸ் ஆண்டர்சன். - படம்: பிபிசி லேன்ஸ் கிரிக்கெட்.
பகிர்:

முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது 43ஆவது வயதிலும் கவுண்டி கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.

முதல் தர கிரிக்கெட்டில் இதுவரை ஆண்டர்சன் 56ஆவது முறையாக 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது

இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளராக இருந்த சர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2024ல் தனது ஓய்வை அறிவித்தார். 188 டெஸ்ட் போட்டிகளில் 704 விக்கெட்டுகளுடன் ஓய்வை பெற்றார்.

Advertisement

Advertisement

தற்போது, கவுண்டி கிரிக்கெட்டில் வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள லங்காஷயர் அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். நார்தாம்ப்டன்ஷயர் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

நார்தாம்ப்டன்ஷயர் அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 215 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினார். கடந்த 6 மாறுதங்களில் இதுதான் அவரது முதல் தொழில்முறை கிரிக்கெட் போட்டி என்பதும் கவனிக்கத்தக்கது.

2026 சீசனில் இவர் கவுண்டியின் சிகப்பு ரோஜா எனப்படும் லங்காஷயர் அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.

மொத்தமாக முதல்தர கிரிக்கெட்டில் இதுவரை ஆண்டர்சன் 305 போட்டிகளில் 1,148 விக்கெட்டுகளை விழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

43-year-old James Anderson defies age, takes career's 56th five-wicket haul during county game.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments