லக்னௌ வீரர் ஹசரங்கா விலகல்! மாற்றுவீரர் யார் தெரியுமா?
ஐபிஎல் தொடரில் இருந்து லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் ஹசரங்கா விலகியுள்ளதைப் பற்றி...
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் வனிந்து ஹசரங்கா காயம் காரணமாக விலகியுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அவருக்கான மாற்றுவீரரையும் அறிவித்துள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 19-வது சீசன் இந்தியாவில் உள்ள தில்லி, மும்பை, சென்னை, பெங்களூரு உள்பட 14 நகர்களில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை, மும்பை, நடப்பு சாம்பியன் பெங்களூரு உள்பட 10 அணிகள் பங்கேற்றுள்ளன.
விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் இந்தத் தொடரில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் வனிந்து ஹசரங்கா காயம் காரணமாக விலகியுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இலங்கையைச் சேர்ந்தவரான வனிந்து ஹசரங்கா, பிப்ரவரியில் ஏற்பட்ட தொடை தசைநார் காயத்திலிருந்து இன்னும் குணமடையவில்லை. இதனால், அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாமல் விலகியுள்ளார்.
ஹசரங்கா கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக எந்த கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை. அவரால் இன்னும் பந்துவீச முடியவில்லை என்றும், இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து தடையில்லாச் சான்றிதழை பெற முடியவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹசரங்கா விலகியதால், தென்னாப்பிரிக்க வீரரான ஜார்ஜ் லிண்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்காக 37 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள லிண்டே, 403 ரன்கள் மற்றும் 35 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதையும் படிக்க... ஆர்சிபி பேட்டிங்; பிளேயிங் லெவனில் ஜோஷ் ஹேசில்வுட்!
In a major blow for Lucknow Super Giants, the side’s star spinner Wanindu Hasaranga has been ruled out for the entirety of the ongoing IPL (Indian Premier League) 2026 season, and the franchise is looking to announce his replacement in the coming two days.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.