அதிவேகம், துல்லியம்... டிஎன்பில் அறிமுக போட்டியில் கவனம் ஈர்த்த தீபேஷ் தேவேந்திரன்!
டிஎன்பில் அறிமுக போட்டியிலேயே கவனம் ஈர்த்த வேகப் பந்துவீச்சாளர் தீபேஷ் தேவேந்திரன் குறித்து...
தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) அறிமுக போட்டியிலேயே தீபேஷ் தேவேந்திரன் தனது அதிவேக, துல்லியமான பந்துகளால் அனைவரையும் கவர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 வயதாகும் தீபேஷ் தேவேந்திரன் டிஎன்பிஎல் தொடரில் முதல்முறையாக மதுரை பேந்தர்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.
நேற்று மாலை நடந்த இந்தப் போட்டியில் தீபேஷ் தேவேந்திரன் 4 ஓவர்களில் 25 ரன்களை மட்டுமே கொடுத்து 1 விக்கெட் எடுத்து அசத்தினார். அவரது வேகப் பந்துவீச்சு அனைவரையும் வியக்க வைப்பதாகவே இருக்கிறது.
Advertisement
Advertisement
பொதுவாகவே தமிழ்நாட்டில் இருந்து, அதிகமான சுழல்பந்து வீச்சாளர்களே உருவாகும் நிலையில் 140 கி.மீ/மணி வேகத்தில் பந்துவீசுவர்கள் குறைவே. முன்னதாக, யோ மகேஷ் இதுமாதிரி அசத்தியிருக்கிறார்.
தற்போது, தீபேஷ் தேவேந்திரன் டிஎன்பிஎல் தொடரில் தொடர்ச்சியாக 140 கி.மீ/மணி வேகத்தில் பந்து வீசினார். ஒருமுறை 145 கி.மீ/மணி வேகத்தில் வீசியதும் குறிப்பிடத்தக்கது.
தீபேஷ் இந்திய யு-19 அணியிலும் தேர்வாகியுள்ளார். இவர் முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரர் தேவேந்திரனின் மகன் ஆவார். இவருக்கு முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் யோ மகேஷ் பயிற்சி அளித்ததும் முதல்முறையாக பெரிய போட்டிகளில் பங்கேற்க ஊக்குவித்ததும் குறிப்பிடத்தக்கது.
Deepesh Devendran impressive his speed in TNPL, proud Tamilnadu fast bowler
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.