ஸ்மித் 71, ஹசன் மஹ்முத் 6 விக்கெட்டுகள்: 198 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஆஸ்திரேலியா!
வங்கதேச வேகப் பந்துவீச்சாளர் ஹசன் மஹ்முத் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறித்து...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேச வேகப் பந்துவீச்சாளர் ஹசன் மஹ்முத் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
டார்வினில் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்த அணி 53 ஓவர்களில் 198 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 71 ரன்கள் எடுத்து அசத்தினார். ஜேக் வெதரால்ட் 23 ரன்களும் டிராவிஸ் ஹெட் 22 ரன்களும் எடுத்தார்கள். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.
Advertisement
Advertisement
வங்கதேசம் சார்பில் வேகப் பந்துவீச்சாளர் ஹசன் மஹ்முத் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியை அடக்கினார். இவருடன் சேர்ந்து மற்ற வேகப் பந்துவீச்சாளரான டஸ்கின் அகமது, எபாடொட் ஹொசைன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
தற்போது, வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை விளையாடி வருகிறது. 3 ஓவர்கள் முடிவில் 11 ரன்கள் எடுத்துள்ளது.
Hasan Mahmud 6 wickets, steve smith 71 runs australia all out for 198 runs
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.