FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரியும்: ஆகிப் நபி

இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்ததாக வேகப் பந்துவீச்சாளர் ஆகிப் நபி தெரிவித்துள்ளார்.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 8:23 pm IST
ஆகிப் நபி - படம் | பிசிசிஐ
பகிர்:

இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்ததாக வேகப் பந்துவீச்சாளர் ஆகிப் நபி தெரிவித்துள்ளார்.

இந்தியா - இலங்கை இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 15) முதல் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே திடலில் நடைபெறுகிறது.

இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலிருந்து பிரதான வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக விலகினார். அவருக்குப் பதிலாக உள்ளூர் போட்டிகளில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆகிப் நபி மாற்று வீரராக சேர்க்கப்பட்டார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்ததாக வேகப் பந்துவீச்சாளர் ஆகிப் நபி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: எனக்கு எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால், ஒரு கிரிகெட் வீரரின் மனநிலை தொடர்ச்சியாக கடின உழைப்பைக் கொடுக்க வேண்டும் என்ற நிலையில் இருக்க வேண்டும். இந்திய அணியில் விளையாடுவதற்காக எனக்கு ஒரு நாள் கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரியும். பல ஆண்டுகளாக கடின உழைப்பைக் கொடுத்து சிறப்பாக செயல்படும்போது, அதற்கான பலன் கண்டிப்பாக இருக்கும்.

இந்திய அணியில் என்னுடைய பெயர் இடம்பெற்றது எனக்கு மகிழ்ச்சியளித்தது. என்னுடைய குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். நான் இந்திய அணிக்காக விளையாடுவதைக் காட்டிலும் அவர்களுக்கு வேறு பெரிய சந்தோஷம் இருக்க முடியாது என்றார்.

summary

Fast bowler Aaqib Nabi has stated that he was confident he would get the opportunity to play for the Indian team.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments