FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

இந்திய அணியின் வரலாற்றில் 3ஆவது ஜம்மு காஷ்மீர் வீரர்..! பும்ராவுக்குப் பதிலாக சேர்ப்பு!

ஜம்மு காஷ்மீரில் இருந்து இந்திய அணிக்குத் தேர்வான மூன்றாவது இந்தியராக சாதனை படைத்துள்ள ஆகிப் நபி குறித்து...

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 5:47 pm IST
ஆகிப் நபி - படம்: பிசிசிஐ
பகிர்:

ஜம்மு காஷ்மீரில் இருந்து இந்திய அணிக்குத் தேர்வான மூன்றாவது இந்தியராக ஆகிப் நபி (29 வயது) சாதனை படைத்துள்ளார்.

இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்தத் தொடரிலிருந்து வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா விலகுவதாக அறிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், பும்ராவுக்குப் பதிலாக ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஆகிப் நபி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ரஞ்சி டிராபியில் சிறப்பாக விளையாடி அனைவரது கனவத்தையும் ஈர்த்தார்.

அண்மையில், ரஞ்சி கோப்பையில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஜம்மு - காஷ்மீர் அணியில் ஆகிப் நபி மிகவும் முக்கிய வீரராக இருந்தார். இந்த சீசனில் மொத்தம் 10 போட்டிகளில் விளையாடிய ஆகிப் நபி 60 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றியுள்ளார்.

அடுத்து ஐபிஎல் தொடரில் முதல்முறையாக விளையாடினார். கிடைத்த வாய்ப்புகளில் பொறுப்புடன் பந்துவீசினார். இந்த நிலையில், இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்வாகியுள்ளார்.

இதற்கு முன்னதாக பர்வேஸ் ரசூல் ஒரு டி20, ஒரு ஒருநாள் போட்டியிலும், உம்ரான் மாலிக் 10 ஒருநாள், 8 டி20 போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்கள். இந்த வரிசையில் மூன்றாவது வீரராக ஆகிப் நபி தேர்வாகியுள்ளார்.

இந்திய அணி: ஷுப்மான் கில் (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், சாய் சுதர்சன்*, துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், தேவ்தத் படிக்கல், சரண்ஷ் ஜெயின், ஆகிப் நபி.

summary

Auqib Nabi is now the third cricketer from the region to receive a maiden India call-up

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments