FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் தமிம் இக்பால் சாதனையை முறியடித்த மொமினுல் ஹக்!

வங்கதேச டெஸ்ட் பேட்டர்களில் புதிய சாதனை படைத்த மொமினுல் ஹக் குறித்து...

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 3:19 pm IST
மொமினுல் ஹக் - படம்: ஏபி
பகிர்:

வங்கதேச டெஸ்ட் பேட்டர்களில் மொமினுல் ஹக் புதிய சாதனை படைத்துள்ளார். தமிம் இக்பாலை முந்தி அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

டார்வினில் தொடங்கிய முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 53 ஓவர்களில் 198 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஸ்மித் 71 ரன்கள் எடுத்தார்.

அடுத்து பேட்டிங் செய்த வங்கதேச அணி முதல் நாள் முடிவில் 24 ஓவர்களில் 96 ரன்கள் எடுத்துள்ளது. இதில் தான்சித் ஹசன் தமிம் 32, மொமினுல் ஹக் 35 ரன்களும் எடுத்து அசத்தியுள்ளார்கள். 

Advertisement

Advertisement

இந்த 35 ரன்களுடன் மொமினுல் ஹக் டெஸ்ட்டில் 5,166 ரன்களுடன் அதிக ரன்கள் குவித்த வங்கதேச பேட்டர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

டெஸ்ட்டில் அதிக ரன்கள் குவித்த வங்கதேச பேட்டர்கள்

1. முஷ்ஃபிகுர் ரஹீம் - 6, 806 ரன்கள் (190 இன்னிங்ஸ்)

2. மொமினுல் ஹக் - 5,166 ரன்கள் (146 இன்னிங்ஸ்)

3. தமிம் இக்பால் - 5,134 ரன்கள் (134 இன்னிங்ஸ்)

summary

Mominul Haque is now Bangladesh's second-highest run-scorer in men's Tests

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments