FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அழுத்தமின்றி விளையாடுங்கள்; அறிமுக வீரருக்கு ரவீந்திர ஜடேஜா அறிவுரை!

அழுத்தமின்றி விளையாடுமாறு அறிமுக வீரர் சரண்ஷ் ஜெயினுக்கு மூத்த வீரர் ரவீந்திர ஜடேஜா அறிவுரை வழங்கியுள்ளார்.

- படம் | பிசிசிஐ
பகிர்:

அழுத்தமின்றி விளையாடுமாறு அறிமுக வீரர் சரண்ஷ் ஜெயினுக்கு மூத்த வீரர் ரவீந்திர ஜடேஜா அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்தியா - இலங்கை இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் இன்று (ஆகஸ்ட் 23) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் எடுத்துள்ளது. தேவ்தத் படிக்கல் சதமும், கேப்டன் ஷுப்மன் கில் அரைசதமும் விளாசி அசத்தினர்.

Advertisement

Advertisement

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவுக்குப் பதிலாக அறிமுக வீரராக சரண்ஷ் ஜெயின் சேர்க்கப்பட்டார். அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ள சரண்ஷ் ஜெயினுக்கு ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அறிவுரை வழங்கியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது: டெஸ்ட் கேப் நம்பர் 320 சரண்ஷ் ஜெயினுக்கு வாழ்த்துகள். இந்தியா ஏ மற்றும் ரஞ்சி போன்ற உள்ளூர் கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக நீங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளீர்கள். இந்திய அணிக்காக விளையாட உங்களது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான வாய்ப்பு கிடைத்துள்ளதாக நினைக்கிறேன். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் உள்ள மிகப் பெரிய கனவு. இந்த தருணத்தை மிகவும் மகிழ்ச்சியாக அனுபவியுங்கள். எந்தவொரு அழுத்தத்தையும் எடுத்துக் கொள்ளாதீர்கள்.

உள்ளூர் போட்டிகளில் நீங்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளீர்கள். அதேபோல, இலங்கைக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டியையும் ஒரு முதல் தர கிரிக்கெட்டாக நினைத்து உங்களது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்துங்கள். உங்களுக்கு ஆதரவாக அணியில் உள்ள 14 வீரர்களும் உள்ளோம். அழுத்தமின்றி மகிழ்ச்சியாக விளையாடுங்கள் என்றார்.

summary

Senior player Ravindra Jadeja has advised debutant Saransh Jain to play without pressure.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments