முதல் ஒருநாள்: பிளேயிங் லெவனை அறிவித்த இங்கிலாந்து!
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான டி20 தொடர் அண்மையில் நிறைவடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நாளை (ஜூலை 14) தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று (ஜூலை 13) அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஜோஸ் பட்லர் நாளை அவரது 200-வது ஒருநாள் போட்டியில் விளையாடுகிறார். கடந்த 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து அணிக்காக அறிமுகமான ஜோஸ் பட்லர் இதுவரை 199 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
முதல் ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் விவரம்
ஜேக்கப் பெத்தேல், பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி ப்ரூக் (கேப்டன்), ஜோஸ் பட்லர், சாம் கரண், வில் ஜாக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், லியம் டாஸன், ஜோஷ் டங், அடில் ரஷீத்.
The England cricket board has announced the playing XI for the first ODI against India.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.