நன்றியுடன் விடைபெறுகிறேன்! சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்!
சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் விலகியது பற்றி...
மிகுந்த நன்றியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விடைபெறுகிறேன் என்று தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான ஸ்டீபன் ஃப்ளெமிங், 2009 முதல் 18 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில், தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஸ்டீபன் ஃப்ளெமிங் விலகுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இதுதொடர்பான சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் ஃப்ளெமிங் தெரிவித்திருப்பதாவது:
"விளையாட்டுத் துறையில் பதினெட்டு ஆண்டுகள் என்பது ஒரு நீண்டகாலப் பகுதியாகும். நான் மிகுந்த நன்றியுணர்வுடன் விடைபெறுகிறேன். என் பயிற்சியாளர் பணிவாழ்விலேயே, சென்னை அணியுடன் இருந்த காலம் சிறப்பானதாக அமைந்தது. நாம் சாதித்த அனைத்தையும் நினைத்து நான் பெருமை கொள்கிறேன்.
நாம் இணைந்து மறக்க முடியாத வெற்றிகளைக் கொண்டாடினோம், கடினமான தருணங்களைக் கடந்து வந்தோம். மேலும் நம் வாழ்நாள் முழுவதும் என்னுடன் நிலைத்திருக்கக்கூடிய நினைவுகளை உருவாக்கினோம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமானதாக இருக்கும். வரும் ஆண்டுகளிலும் நான் அந்த அணிக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
இவரின் தலைமையின் கீழ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை ஐபிஎல் கோப்பைகளையும், இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்றுள்ளது. மேலும், 12 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதிப் பெற்றதுடன், 10 முறை ஐபிஎல் இறுதிப் போட்டிகளுக்குச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
I bid farewell with gratitude - CSK coach Stephen Fleming
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.