ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியை தொடங்கிய இந்திய அணி!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் இந்திய அணி ஈடுபட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் இந்திய அணி ஈடுபட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி வருகிற ஜூன் 6 ஆம் தேதி முதல் நியூ சண்டீகரில் தொடங்குகிறது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் இந்திய அணி வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தீவிர பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டனர். மேலும், வலதுகை வேகப் பந்துவீச்சாளரான குர்னூர் பிராரும் நீண்ட நேரம் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டார். நெட் பந்துவீச்சாளராக அணியில் உள்ள ஜம்மு - காஷ்மீர் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஆகிப் நபியும் நீண்ட நேரம் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டார்.
இடதுகை சுழற்பந்துவீச்சாளரான ஹர்ஷ் துபே, பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங் பயிற்சியிலும் ஈடுபட்டார். அவரை ஆல்ரவுண்டராக பயன்படுத்திக் கொள்ள இந்திய அணி திட்டமிடுவதாகத் தெரிகிறது. ஹர்ஷ் துபே மற்றும் மானவ் சுதர் இருவரும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் முன்னிலையில் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டனர்.
கேப்டன் ஷுப்மன் கில் உள்பட அனைத்து பேட்டர்களும் தீவிர பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர்.
The Indian team is engaged in practice for the Test match against Afghanistan.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.