கேன் வில்லியம்சனுக்குப் பதிலாக டெஸ்ட் அணியில் மாற்று வீரர் சேர்ப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சனுக்குப் பதிலாக மாற்று வீரராக வில் யங் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சனுக்குப் பதிலாக மாற்று வீரராக வில் யங் சேர்க்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதல் டெஸ்ட் போட்டி நிறைவடைந்த பிறகு, நியூசிலாந்து அணியின் மூத்த வீரரான கேன் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளுக்கான நியூசிலாந்து அணியிலிருந்து அவர் விலகினார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சனுக்குப் பதிலாக மாற்று வீரராக வில் யங் சேர்க்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணியுடன் வில் யங் நாளை (ஜூன் 14) இணையவுள்ளார். இதனை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஓவலில் வருகிற ஜூன் 17 ஆம் தேதி முதல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
Will Young has been included as a replacement for Kane Williamson in the New Zealand squad for the Test series against England.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.