இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை!
இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் படைத்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் படைத்துள்ளார்.
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று (ஜூன் 13) தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது. மழை காரணமாக ஆட்டம் 25 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஆப்கானிஸ்தான் அணி முதலில் விளையாடி வருகிறது.
அதிவேக சதம் விளாசிய ரஹ்மனுல்லா குர்பாஸ்!
Advertisement
Advertisement
ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் ஸத்ரான் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். செதிக்குல்லா அடல் 0 ரன், ரஹ்மத் ஷா 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், ஆப்கானிஸ்தான் அணி 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்த நிலையில், ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷகிதி ஜோடி சேர்ந்தனர். ரஹ்மனுல்லா குர்பாஸ் களமிறங்கியது முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 48 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் வீரர் அடிக்கும் அதிவேக சதம் இதுவாகும்.
ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக கடந்த 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தான் வீரர் ஷாகித் அஃப்ரிடி 45 பந்துகளில் அதிவேகமாக சதம் விளாசி அசத்தினார். 48 பந்துகளில் சதம் விளாசியதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக அதிவேக சதம் விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை ரஹ்மனுல்லா குர்பாஸ் படைத்துள்ளார்.
அதிரடியாக விளையாடிய ரஹ்மனுல்லா குர்பாஸ் 51 பந்துகளில் 102 ரன்கள் (8 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள்) எடுத்து ஆட்டமிழந்தார்.
Afghanistan's Rahmanullah Gurbaz has set the record for the second-fastest century against India in One Day Internationals.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.