கவுன்டி கிரிக்கெட்டில் அசத்திய மானவ் சுதர்!
கவுன்டி கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்திலேயே இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் மானவ் சுதர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
கவுன்டி கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்திலேயே இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் மானவ் சுதர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இடதுகை சுழற்பந்துவீச்சாளரான மானவ் சுதர் அண்மையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக களமிறங்கினார். அறிமுகப் போட்டியிலேயே அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மேலும், ஆட்ட நாயகன் விருதினையும் வென்றார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்குப் பிறகு கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான வாய்ப்பு மானவ் சுதருக்கு கிடைத்தது. கவுன்டி கிரிக்கெட்டில் வார்விக்ஷையருக்காக அறிமுக வீரராக களமிறங்கிய மானவ் சுதர், இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
Advertisement
Advertisement
யோர்க்ஷையர் அணி வீரர்கள் சாம் வொயிட்மேன் (55 ரன்கள்), வில்லியம் லக்ஸ்டான் (167 ரன்கள்) இவர்கள் இருவரின் விக்கெட்டினையும் மானவ் சுதர் கைப்பற்றினார்.
கவுன்டி சாம்பியன்ஷிப்பில் அடுத்த இரண்டு சுற்றுகளுக்காகவும் வார்விக்ஷையர் அணிக்காக விளையாட மானவ் சுதர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Indian spinner Manav Suthar impressed by taking two wickets in his debut county cricket match.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.