அறிமுக தொடரில் வெண்கலம் வென்ற கபில்..! இந்தியாவுக்கு 59ஆவது பதக்கம்!
அறிமுக ஆசிய விளையாட்டு குத்துச் சண்டையில் வெண்கலம் வென்ற இந்திய வீரர் கபில் குறித்து...
அறிமுக ஆசிய விளையாட்டு குத்துச்சண்டையில் இந்திய வீரர் கபில் பொக்காரியா வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். இத்துடன் இந்தியாவுக்கு 59 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
இன்று இந்திய அணி ஒரே நாளில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. மேலும், குத்துச்சண்டையில் இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன.
Advertisement
Advertisement
ஆடவருக்கான 90 கிலோ எடைப் பிரிவில் அரையிறுதியில் இந்திய வீரர் கபில் பொக்காரியா உஸ்பெகிஸ்தானின் துராபெக் கபிபுல்லாயேவ் உடன் மோதினார்.
இந்தப் போட்டியில் 1-4 என இந்திய வீரர் தோல்வியுற்றார். நான்கு நடுவர்கள் உஸ்பெகிஸ்தான் வீரருக்கு சாதகமாக மதிப்பெண் வழங்கினார்கள்.
இத்துடன் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 3 வெண்கலம் கிடைத்துள்ளது. மூவர் இறுதிச் சுற்றிலும் இருக்கிறார்கள். இதனால் 6 பதக்கங்கள் இப்போதைக்கு உறுதியாகியுள்ளன.
மொத்தமாக, இந்தியாவுக்கு 10 தங்கம், 21 வெள்ளி, 28 வெண்கலம் என 59 பதக்கங்கள் கிடைத்துள்ளன. இத்துடன் தரவரிசையிலும் ஏழாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
Indian Boxer Kapil Pokhariya Wins Bronze On Asian Games Debut
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.