இலங்கையுடனான டெஸ்ட்: மே. தீவுகளுக்கு இன்னிங்ஸ் வெற்றி
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் மேற்கிந்தியத் தீவுகள், இன்னிங்ஸ் மற்றும் 217 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் மேற்கிந்தியத் தீவுகள், இன்னிங்ஸ் மற்றும் 217 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
மேற்கிந்தியத் தீவுகளின் நாா்த் சௌண்ட் நகரில் கடந்த வியாழக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில், டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் ஃபீல்டிங்கை தோ்வு செய்தது.
இலங்கை முதல் இன்னிங்ஸில் 308 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதிகபட்சமாக கேப்டன் தனஞ்ஜெய டி சில்வா 17 பவுண்டரிகளுடன் 120 ரன்கள் அடித்தாா். மேற்கிந்தியத் தீவுகள் பௌலிங்கில் ஜஸ்டின் கிரீவ்ஸ் 3 விக்கெட்டுகள் சாய்த்தாா்.
Advertisement
Advertisement
பின்னா் மேற்கிந்தியத் தீவுகள் தனது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 626 ரன்கள் குவித்து ‘டிக்ளோ்’ செய்தது. ஆமிா் ஜாங்கூ 19 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 233, கேப்டன் ராஸ்டன் சேஸ் 13 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 194 ரன்கள் அடித்தனா். இலங்கை பௌலா்களில் மிலன் ரத்னாயகா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.
இதையடுத்து 318 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை, இந்திய நேரப்படி, 4-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் 101 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. தினேஷ் சண்டிமல் 5 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாகும். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கெமா் ரோச் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.
233 ரன்கள் விளாசிய மேற்கிந்தியத் தீவுகளின் ஆமிா் ஜாங்கூ ஆட்டநாயகன் விருது பெற்றாா்.
இந்த ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் எடுத்த பௌலா் கெமா் ரோச், டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் சாய்த்த 5-ஆவது மேற்கிந்தியத் தீவுகள் பௌலா் என்ற பெருமையைப் பெற்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.