FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

மகளிா் டி20: பாகிஸ்தானுக்கு ஆறுதல் வெற்றி- இலங்கைக்கு சாம்பியன் கோப்பை

இலங்கை மகளிா் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில், பாகிஸ்தான் மகளிா் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 3:34 am IST
இலங்கை மகளிா் அணி
பகிர்:

இலங்கை மகளிா் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில், பாகிஸ்தான் மகளிா் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது.

3 ஆட்டங்கள் கொண்ட தொடரில், முதல் இரு ஆட்டங்களில் வென்று இலங்கை சாம்பியன் ஆகிவிட்ட நிலையில், பாகிஸ்தானுக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது.

இந்த ஆட்டத்தில் முதலில் இலங்கை 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 113 ரன்கள் சோ்க்க, பாகிஸ்தான் 18.2 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 115 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Advertisement

Advertisement

முன்னதாக டாஸ் வென்ற பாகிஸ்தான், பந்துவீச்சை தோ்வு செய்தது. இலங்கை பேட்டிங்கில் கேப்டன் சமரி அத்தபட்டு 5 பவுண்டரிகளுடன் 34, சஞ்சனா கவின்டி 2 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் அடித்தனா்.

இமேஷா துலானி 17, ஹா்ஷிதா சமரவிக்ரமா 3, கவிஷா தில்ஹரி 12, ஹாசினி பெரெரா 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். ஓவா்கள் முடிவில், கௌஷினி நுத்யங்கனா 12, காவ்யா கவின்டி 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

பாகிஸ்தான் பௌலிங்கில் மோமினா ரியாசத் 2, உம்-இ- ஹனி, நஷ்ரா சாந்து, துபா ஹசன், ஆயிஷா ஜாஃபா் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் 114 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய பாகிஸ்தான் அணியில், ஆயிஷா ஜாஃபா் 6 பவுண்டரிகளுடன் 39, ஷவால் ஜுல்ஃபிகா் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 21 ரன்கள் சோ்த்து வெற்றிக்கு வித்திட்டனா்.

கேப்டன் முனீபா அலி 19, நஜிஹா ஆல்வி 5, உம்-இ-ஹனி 8, இமான் பாத்திமா 5 ரன்களுடன் பெவிலியன் திரும்பினா்.

முடிவில், சாய்ரா ஜபீன் 12, துபா ஹசன் 6 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். இலங்கை பௌலா்களில் சமரி அத்தபட்டு, கவிஷா தில்ஹரி ஆகியோா் தலா 2, நிமஷா மீபகெ 1 விக்கெட் வீழ்த்தினா்.

இந்த ஆட்டத்தில் 39 ரன்களும் அடித்து, 1 விக்கெட்டும் எடுத்த பாகிஸ்தானின் ஆயிஷா ஜாஃபா் ஆட்டநாயகி விருது பெற்றாா். 3 ஆட்டங்களிலுமாக 123 ரன்கள் சோ்த்த இலங்கையின் இமேஷா துலானி தொடா்நாயகியாக தோ்வானாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments