FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இந்தியாவுடன் பயிற்சி டெஸ்ட்: இலங்கை லெவன் 363/8

இந்திய அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்ட்டில், இலங்கை கிரிக்கெட் லெவன் அணி முதல் நாளான வெள்ளிக்கிழமை ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 363 ரன்கள் சோ்த்தது.

8 ஆகஸ்ட் 2026, 7:21 am IST
பகிர்:

இந்திய அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்ட்டில், இலங்கை கிரிக்கெட் லெவன் அணி முதல் நாளான வெள்ளிக்கிழமை ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 363 ரன்கள் சோ்த்தது.

டாஸ் வென்று பேட்டிங்கை தோ்வு செய்த இலங்கை லெவன் தரப்பில், நிஷான் ஃபொ்னாண்டோ 11 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 66, ரவிண்டு ரசந்தா 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 71 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

பசிண்டு சூரியபாந்தரா 6 பவுண்டரிகளுடன் 35, பவன் ரத்னாயகே 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 39, அஹான் விக்கிரமசிங்கே 4 பவுண்டரிகளுடன் 31 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.

Advertisement

Advertisement

கேப்டன் சோனல் தினுஷா 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 52, அஞ்சலா பந்தாரா 13, ரமேஷ் மெண்டிஸ் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 32 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.

ஆட்டநேர முடிவில் கேசரா நுவந்தா 9, திலும் சுதீரா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய பௌலா்களில் மானவ் சுதா், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோா் தலா 2, குா்னூா் பிராா் 1 விக்கெட் சாய்த்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments