இந்திய அணியில் சூர்யவன்ஷி... முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அணி அறிவிப்பு!!
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
இலங்கை, ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இந்தியா ஏ அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
இந்தியா, ஆப்கானிஸ்தான் ஏ அணிகள் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடவிருக்கின்றன.
ஐபிஎல் சீசன் முடிவடைந்த உடனேயே, இந்தியா 'ஏ' இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறது. ஜூன் 9 ஆம் தேதி தொடங்கும் இந்த முத்தரப்பு தொடர் ஜூன் 21 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.
Advertisement
Advertisement
இந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் கேப்டனாக திலக் வர்மாவும் துணை கேப்டனாக ரியான் பராக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக விளையாடி வரும் இளம் வீரர் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்தியா ஏ அணியில் முதல்முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
முதல் ஐபிஎல் சீசன் போல நடப்பு ஐபிஎல் தொடரிலும் வைபவ் சூர்யவன்ஷி தொடர்ந்து அசத்தி வருகிறார். இதுவரை 11 போட்டிகளில் விளையாடி இரண்டு சதங்கள் உள்பட 440 ரன்கள் எடுத்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் ஆகியோரும் இந்திய அணியில் தேர்வாகியுள்ளனர்.
இந்திய அணி விவரம்: திலக் வர்மா (கேப்டன்), பிரியன்ஷ் ஆர்யா, வைபவ் சூர்யவன்ஷி, ரியான் பராக் (துணை கேப்டன்), ஆயுஷ் பதோனி, நிஷாந்த் சிந்து, ஹர்ஷ் துபே, சூர்யன்ஷ் ஷெட்ஜ், பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), குமார் குஷாக்ரா (விக்கெட் கீப்பர்), விப்ராஜ் நிகம், யாஷ் தாக்கூர், யாஷ் தாக்கூர், யுத்வீர் சிங், அன்ஷுல் கம்போஜ், அர்ஷத் கான்.
The Indian Cricket Board has named the India A squad for tri-series against Sri Lanka A and Afghanistan A. Tilak Varma has been named as the captain of the 15-member squad.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.