முகப்பு
கிரிக்கெட்

டிராவிஸ் ஹெட் மனைவிக்கு மிரட்டல் விடுத்த ஆர்சிபி ரசிகர்கள்! வலுக்கும் கண்டனம்!!

ஹைதராபாத் வீரர் டிராவிஸ் ஹெட் மனைவிக்கு மிரட்டல் விடுத்த ஆர்சிபி ரசிகர்களுக்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளதைப் பற்றி...

டிராவிஸ் ஹெட் - விராட் கோலி - ஹெட் குடும்பத்தினர்.
பகிர்:

விராட் கோலி மற்றும் டிராவிஸ் ஹெட் இடையேயான வாக்குவாதம் தொடர்பாக, ஹெட்டின் மனைவி ஜெஸ்ஸிகா ஹெட்டுக்கு ஆர்சிபி ரசிகர்கள் இணையத்தில் மிரட்டல் விடுத்து வசைபாடியிருப்பது கடும் எதிர்ப்புகளை உருவாக்கியுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுகள் நேற்று (மே 24) நிறைவடைந்த நிலையில், நடப்பு சாம்பியன் பெங்களூரு, முன்னாள் சாம்பியன்கள் ராஜஸ்தான், ஹைதராபாத், குஜராத் ஆகிய அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற்றிருக்கின்றன.

கடந்த மே 22 ஆம் தேதி நடைபெற்ற ஹைதராபாத் - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியில், ஹைதராபாத் நிர்ணயித்த 255 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் பெங்களூரு அணி 200 ரன்கள் மட்டுமே எடுத்து 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில் விராட் கோலியின் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஹைதராபாத் வீரர் டிராவிஸ் ஹெட், ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டு அவரை வம்பிழுக்க, “இப்போது வந்து சில ஓவர்கள் பந்து வீசுங்கள்” என்று கூற, சில நிமிடங்களிலேயே விராட் கோலி அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

அப்போது டிராவிஸ் ஹெட், தனது கைகளைத் தட்டி, “நான் பந்து வீசுவதற்கு முன்னதாகவே அவுட்டாகி விட்டாய்” என்றும் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

இந்தப் போட்டி முடிந்த பிறகு டிராவிஸ் ஹெட்டிடம் விராட் கோலி கை கைகுலுக்க மறுத்து அங்கிருந்து நகர்ந்து சென்றார். இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல வேகமாகப் பரவியது. இதனால், ஆத்திரமடைந்த ஆர்சிபி மற்றும் விராட் கோலியின் ரசிகர்கள், ஹெட்டின் மனைவி ஜெஸ்ஸிகா ஹெட்டை இணையத்தில் கடுமையாக வசைபாடி வருகின்றனர்.

முன்னதாக, 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரின் போதும், டிராவிஸ் ஹெட் மனைவி, குடும்பத்தினர் மீது கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையான தாக்குதல்களை நடத்தியிருந்த நிலையில், மீண்டும் இதுபோன்று ஆர்சிபி மற்றும் விராட் கோலியின் ரசிகர்கள் நடந்து கொண்டிருப்பது சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தச் செயலுக்கு ரசிகர்கள் பலர் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

summary

Jessica Head opens up on the online abuse she's been receiving from the puppets of Virat Kohli:It feels like a repeat of the abuse that happened after the World Cup.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.