379 நாள்களுக்குப் பிறகு... பாகிஸ்தான் மகளிரணிக்கு தலைமைப் பயிற்சியாளர் நியமனம்!
பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணிக்கு நியமிக்கப்பட்டுள்ள தலைமைப் பயிற்சியாளர் குறித்து...
பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் வீரர் ஷேன் டீட்ஸ் (51 வயது) தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆடவர் கிரிக்கெட்டைப் போலவே மகளிர் கிரிக்கெட்டுக்கும் ரசிகர்கள் அதிகரித்து வருகிறார்கள். ஆசிய கண்டத்தில் இந்தியாவுக்குப் பிறகு பாகிஸ்தான் இரண்டாவது சிறந்த அணியாக இருக்கிறது.
Advertisement
Advertisement
பாகிஸ்தான் மகளிர் கிரிக்கட் அணி ஐசிசி மகளிர் வளர்ந்து வரும் நாடுகளுக்கான சாம்பியன்ஸ் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் முதலிடம் வகித்துள்ளது.
இந்த நிலையில், இந்த அணிக்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் டீட்ஸ் (51 வயது) தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான தொடரில் இருந்து இவர் பயிற்சியாளராகத் தனது பணிகளைத் தொடங்குவார்.
இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அளித்த அறிக்கையில் ஷேன் டீட்ஸ், “பாகிஸ்தான் மகளிர் அணிக்கு தலைமைப் பயிற்சியாளர் ஆனதுக்கு மிகவும் கௌரவமாக கருதுகிறேன்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக மார்க் கோல்ஸ், டேவிட் ஹெம்ப் ஆகிய வெளிநாட்டு பயிற்சியாளர்கள் இந்த அணிக்கு பணியாற்றியுள்ளார்கள். ஷேன் டீட்ஸ் மூன்றாவது வெளிநாட்டு பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது வாசிம் பயிற்சியாளராக நீக்கப்பட்ட பிறகு, மகளிரணிக்கு தலைமைப் பயிற்சியாளர் இன்றே செயல்பட்டே வந்தது. 379 நாள்களுக்குப் பிறகு இப்போது நியமிக்கப்பட்டுள்ளார். வஹாப் ரியாஸ் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார்.
ஷேன் டீட்ஸ் தலைமையில் வங்கதேச மகளிரணி 2024, 2026 டி20 உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தது. இவர் வங்கதேசம், நெதர்லாந்து மகளிர் அணிகளுக்கும் பயிற்சி அளித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு 2008-2013 வரை உயர் செயல்திறன் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். பாகிஸ்தான் அணி டி20 உலகக்கோப்பையை நடத்தவிருப்பதால் அதனை வெல்லும் முனைப்புக்கு தயாராகி வருகிறது.
சமீபத்தில் பாகிஸ்தான் மகளிரணி கேப்டன் ஃபாதிமா சனா ஆடவர் அணிக்கு அளிக்கும் ஆதரவைப் போலவே மகளிரணிக்கு அளியுங்கள் என ரசிகர்களிடம் கோரிக்கை வைத்திருந்தார்.