ஐபிஎல் 2027: ஷிம்ரன் ஹெட்மயரை விடுவிக்க காரணம் இதுதான்; குமார் சங்ககாரா விளக்கம்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து ஷிம்ரன் ஹெட்மயரை விடுக்கக் காரணம் என்ன என்பது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் குமார் சங்ககாரா விளக்கமளித்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து ஷிம்ரன் ஹெட்மயரை விடுக்கக் காரணம் என்ன என்பது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் குமார் சங்ககாரா விளக்கமளித்துள்ளார்.
அடுத்தாண்டு ஐபிஎல் சீசனுக்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. அடுத்த சீசன் தொடங்குவதற்கு முன்பாக வீரர்களுக்கான மினி ஏலம் கோவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. ஏலம் தொடங்கும் முன்பு அணிகள் வீரர்களை தக்கவைத்தும், விடுவித்தும் வந்தனர்.
அதன் ஒரு பகுதியாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர்களில் ஒருவரான ஷிம்ரன் ஹெட்மயரை அந்த அணி நிர்வாகம் விடுவித்தது. மேலும், துஷார் தேஷ்பாண்டே, ஆடம் மில்னே, குல்தீப் சென், யுத்விர் சிங், குவெனா மபாகா, ரவி சிங் ஆகியோரையும் விடுவித்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இடதுகை பேட்டரான ஷிம்ரன் ஹெட்மயர் வேறு இடத்தில் களமிறங்கி விளையாட விரும்பியதாகவும், அணியில் உள்ள காம்பினேஷன் அதற்கு சரியாக அமையாததால் வேறு வழியின்றி அவரை விடுவிக்கக் கூடிய சூழல் உருவானதாகவும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஹெட்மயர் வேறு இடத்தில் களமிங்கி விளையாட விரும்பினார். அணியின் காம்பினேஷன் அதற்கு சரியாக அமையாததால் வேறு வழியின்றி அவரை விடுவிக்க நேர்ந்தது. ஆனால், அவர் மிகவும் சிறப்பான வீரர். அவரை அணியிலிருந்து விடுவித்தது மிகவும் கடினமான முடிவு என்றார்.
கடந்த ஐபிஎல் சீசனில் 8 போட்டிகளில் விளையாடிய ஹெட்மயர் 78 ரன்கள் எடுத்தார். கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற சீசனில் 13 இன்னிங்ஸ்களில் அவர் 239 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு அரைசதம் அடங்கும்.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 57 போட்டிகளில் விளையாடியுள்ள ஹெட்மயர் 1043 ரன்கள் குவித்துள்ளார்.
இந்த ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் மூன்றாவது அல்லது நான்காவது வீரராக களமிறங்கி விளையாடிய ஹெட்மயர் 54 போட்டிகளில் 1305 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.