முகப்பு

செனா நாடுகளில் ஆதிக்கம்... முதல் இந்தியராக கே.எல். ராகுல் வரலாற்றுச் சாதனை!

இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரர் கே.எல். ராகுல் நிகழ்த்திய வரலாற்றுச் சாதனை குறித்து...

செனா நாடுகளில் ஆதிக்கம்... முதல் இந்தியராக கே.எல். ராகுல் வரலாற்றுச் சாதனை!
சதம் அடித்த மகிழ்ச்சியில் கே.எல். ராகுல் - படம்: எக்ஸ் / பிசிசிஐ
பகிர்:

இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரர் கே.எல். ராகுல் செனா நாடுகளில் சதம் அடித்த இந்தியராக வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி 486/4 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் இந்தியா 118 ரன்கள் முன்னிலையும் வகிக்கிறது.

இந்தப் போட்டியில் இந்தியாவின் தொடக்க வீரர் கே.எல். ராகுல் 290 பந்துகள் விளையாடி 136 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடித்திருந்தார்.

Advertisement

Advertisement

செனா நாடுகள் (SENA counties) என்றழைக்கப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் சதம் அடித்த முதல் முதல் இந்திய தொடக்க வீரராக கே.எல். ராகுல் வரலாறு படைத்துள்ளார்.

இந்தியாவின் தலைசிறந்த டெஸ்ட் தொடக்க வீரராக கே.எல். ராகுல் மாறியுள்ளார். 34 வயதாகும் ராகுல் 71 டெஸ்ட்டில் 4424 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 13 சதங்கள், 21 அரைசதங்கள் அடங்கியுள்ளன.

கே.எல். ராகுலின் டெஸ்ட் போட்டிகளின் சராசரி 37.49ஆக இருக்கிறது. தொடக்கத்தை விடவும் தற்போது சிறப்பாக விளையாடி இந்தியாவின் தூணாக மாறிவருகிறார்.

summary

K.L. Rahul achieves a historic milestone by becoming the first Indian to score a century in SENA countries!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.