ஆப்கன் கிரிக்கெட்டின் வளர்ச்சி..! ரஹ்மத் ஷாவின் வரலாற்றுச் சாதனை!
ஆப்கன் வீரர் ரஹ்மத் ஷா ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நிகழ்த்திய வரலாற்றுச் சாதனை குறித்து...
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் டாப் 10ல் இடம்பிடித்த முதல் ஆப்கன் வீரராக ரஹ்மத் ஷா (33 வயது) வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
ஜிம்பாப்வே அணி ஆப்கானிஸ்தானுடன் டி20 தொடரை 0-3 என இழந்தது. இதனைத் தொடர்ந்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் சமனில் முடிந்தது.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் ஜிம்பாப்வே இரண்டு இன்னிங்ஸிலும் 500 ரன்களை குவித்து சாதனை படைத்தது. இதில் ஆப்கன் கேப்டன் ரஹ்மத் ஷா 173 ரன்கள் குவித்து அசத்தினார்.
இந்த அபாரமான ஆட்டத்தினால் அவர் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 6 இடங்கள் முன்னேறி 7ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். டாப் 10ல் முதல்முறையாக இடம்பிடித்த ஆப்கன் வீரராகவும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
ரஹ்மத் ஷா இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் 1,372 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 54.88ஆக உயர்ந்துள்ளது. ஒரு இரட்டைச் சதம், ஐந்து சதம், ஏழு அரைசதம் அடித்துள்ளார்.
ஐசிசி டெஸ்ட் பேட்டர்கள் தரவரிசை
1. ஹாரி புரூக்
2. ஜோ ரூட்
3. டிராவிஸ் ஹெட்
4. டெம்பா பவுமா
5. ஸ்டீவ் ஸ்மித்
6. ரச்சின் ரவீந்திரா
7. ரஹ்மத் ஷா
8. ரிஷப் பந்த்
9. டேரில் மிட்செல்
10. ஷுப்மன் கில்