மினி ஏலம்: வெளிநாட்டினர் பிரிவில் ஆஸ்திரேலிய, தென்னாப்பிரிக்க வீரர்கள் ஆதிக்கம்!
ஐபிஎல் 2027 சீசனை முன்னிட்டு நடைபெற இருக்கும் மினி ஏலத்தில் பங்கேற்கவிருக்கும் வீரர்கள் குறித்து...

ஐபிஎல் 2027 சீசனை முன்னிட்டு கோவாவில் நடைபெற இருக்கும் மினி ஏலத்தில் மொத்தமாக 1220 வீரர்கள் பங்கேற்கவிருக்கிறார்கள். இதில் 939 இந்தியர்கள் பங்கேற்கிறார்கள்.
வெளிநாட்டு வீரர்களைப் பொறுத்தவரையில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் இருந்து அதிகமான வீரர்கள் பங்கேற்று அசத்தியுள்ளார்கள்.
மொத்தமாக 17 நாடுகளில் இருந்து 281 வெளிநாட்டு வீரர்கள் மினி ஏலத்தில் பங்கேற்கிறார்கள். இதில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவில் 53 வீரர்கள் பங்கேற்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவில் 40, நியூசிலாந்து 25, ஆப்கானிஸ்தான் 24, இலங்கை 21, இங்கிலாந்து 16, வங்கதேசம் 12 வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
Advertisement
Advertisement
அயர்லாந்தில் இருந்து ஏழு, ஜிம்பாப்வே 6 பேரும் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். இணை நாடுகளில் இருந்து அமெரிக்காவில் 13, நேபாளம், யுஎஇ தலா 10 பேரும் நெதர்லாந்து 3, கனடா, ஜப்பான், ஸ்காட்லாந்து தலா 2 பேரும் பதிவுசெய்துள்ளார்கள்.
மொத்தமாக 184 வீரர்கள் ஐபிஎல் அணிகளால் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள். மீதமிருக்கும் 66 இடங்களுக்கு 1220 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கிறார்கள். அதிலும் 25 வெளிநாட்டு இடங்களுக்கு 281 பேர் பங்கேற்பதும் குறிப்பிடத்தக்கது.
தேசிய அணிகளுக்காக விளையாடும் வீரர்கள் 184, அறிமுக அல்லது தேசிய அணிக்காக விளையாடாத 994 வீரர்களும் இணை நாடுகளில் இருந்து 42 வீரர்களும் பங்கேற்கிறார்கள்.
இந்தியாவில் இருந்து தேசிய அணிக்கு விளையாடாத 925 வீரர்கள் பங்கேற்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டிச.4ஆம் தேதி இந்த வீரர்கள் விபரங்கள் வெளியாகும். டிச.16ஆம் தேதி கோவாவில் மினி ஏலம் நடைபெறுமென பிசிசிஐ அறிவித்துள்ளது.
முன்னாள் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், கேமரூன் பென்கிராஃப்ட், டேவிட் வார்னர் என பல ஜாம்பவான் வீரர்களும் இதில் பங்கேற்கிறார்கள்.