டெஸ்ட் பந்துவீச்சு தரிவரிசை: டாப் 15ல் ஒரேயொரு இந்தியர்..! தோல்விக்குக் காரணம் இதுதானா?
ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் டாப் 15ல் ஒரேயொரு இந்திய வீரர் மட்டுமே இடம்பெற்றுள்ளது குறித்து...

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் டாப் 15ல் ஒரேயொரு இந்திய வீரர் மட்டுமே இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆட்டத்தை சமனில் முடித்தது. இந்தப் போட்டியில் கே.எல். ராகுல், ஷுப்மன் கில், ரிஷப் பந்த் சிறப்பாக பேட்டிங் செய்து அசத்தினார்கள்.
வெற்றி பெற வேண்டிய இந்த டெஸ்ட்டில் இந்திய அணி பந்துவீச்சில் பெரிதாக சோபிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஜஸ்ப்ரீத் பும்ரா மட்டுமே சிறப்பாக பந்துவீசினார்.
Advertisement
Advertisement
முகமது சிராஜ் இல்லாத காரணத்தினால் இந்திய அணியினால் வெளிநாட்டுப் போட்டிகளில் வெல்ல முடியாமல் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் டாப் 15ல் ஜஸ்ப்ரீத் பும்ரா மட்டுமே இருக்கிறார். இவர் மூன்று இடங்கள் முன்னேறி இரண்டாம் இடத்துக்குச் சென்றுள்ளார். மிட்செல் ஸ்டார்க் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
முகமது சிராஜ் 17ஆவது இடத்திலும் ஜடேஜா 18ஆவது இடத்திலும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரையும் பிளேயிங் லெவனில் சேர்க்காத கம்பீரின் முடிவு முன்னாள் வீரர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றன.
ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசை
1. மிட்செல் ஸ்டார்க்
2. ஜஸ்ப்ரீத் பும்ரா
3. ஆலி ராபின்சன்
4. மார்கோ யான்சென்
5. மாட் ஹென்றி