முகப்பு

மும்பை இந்தியன்ஸ் பதிவில் இருப்பது யார்? மீண்டும் கேப்டனாகும் ரோஹித் சர்மா?

மும்பை இந்தியன்ஸ் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட முகம் தெரியாத வீரர் குறித்து...

மும்பை இந்தியன்ஸ் பதிவில் இருப்பது யார்? மீண்டும் கேப்டனாகும் ரோஹித் சர்மா?
மும்பை இந்தியன்ஸ் லோகோ, முகம் காட்டப்படாத வீரர். - படங்கள்: எக்ஸ் / மும்பை இந்தியன்ஸ்
பகிர்:

மும்பை இந்தியன்ஸ் தனது சமூக வலைதளத்தில் முகம் தெரியாத வீரரின் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளது. அது யாராக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஐபிஎல் 2027 சீசனுக்கான மினி ஏலம் வரும் டிச.16ஆம் தேதி கோவாவில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் ஒவ்வொரு அணிகளும் தக்கவைப்பு மற்றும் வீரர்களை விடுவித்தலை அறிவித்தன.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த ஹார்திக் பாண்டியா பஞ்சாப் கிங்ஸுக்குச் செல்ல, அங்கிருந்து அர்ஷ்தீப் சிங் மும்பைக்கு மாறினார். இதனால், மும்பையில் யார் கேப்டன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement

Advertisement

மீண்டும் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட இருப்பதாகத் தகவலகள் வெளியாகிய நிலையில், மும்பை இந்தியன்ஸ் தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவிட்டுள்ளது.

முகம் காட்டப்படாத வீரர் ஒருவர் கையில் தொப்பியை எடுக்கும் காட்சியைப் பதிவிட்டுள்ளது. இது யாராக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பலரும் ரோஹித் சர்மா எனக் கூறி வருகிறார்கள்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் பல கேப்டன்கள் இருக்கிறார்கள். ரோஹித் சர்மா, சூரய்குமார் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, திலக் வர்மா என பலரும் போட்டியில் இருக்கிறார்கள்.

ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை கோப்பை வென்ற அணிகளாக சிஎஸ்கேவும் மும்பை இந்தியன்ஸ் அணிகளும் இருக்கின்றன. அதில் கேப்டன் தோனி ஓய்வை அறிவித்துவிட்டார்.

ரோஹித் சர்மா இன்னொரு கோப்பை வென்றால் அதிக கோப்பைகள் வென்ற கேப்டனாக சாதனை படைப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

summary

Rohit Sharma in a Mumbai Indians post? Announcement of the captain?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.