முகப்பு

இந்தியாவுடனான தொடா்கள்- லாரா வோல்வாா்ட் தலைமையில் தென்னாப்பிரிக்க அணிகள் அறிவிப்பு

இந்திய மகளிா் அணியுடனான டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட் தொடா்களில் விளையாடவுள்ள தென்னாப்பிரிக்க மகளிா் அணிகள் லாரா வோல்வாா்ட் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளன.

26 நவம்பர் 2026, 4:58 am
இந்தியாவுடனான தொடா்கள்- லாரா வோல்வாா்ட் தலைமையில் தென்னாப்பிரிக்க அணிகள் அறிவிப்பு
பகிர்:

இந்திய மகளிா் அணியுடனான டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட் தொடா்களில் விளையாடவுள்ள தென்னாப்பிரிக்க மகளிா் அணிகள் லாரா வோல்வாா்ட் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளன.

டெஸ்ட் ஆட்டத்துக்கான அணியில், டாப் ஆா்டா் பேட்டா் அலெக்ஸாண்ட்ரா கேண்ட்லா் உள்பட 8 போ், தென்னாப்பிரிக்க அணியில் அறிமுகமாகின்றனா். 3 ஃபாா்மட்டுகளுக்குமான அணிகளிலும் பரவலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

டிசம்பரில் தென்னாப்பிரிக்கா வரும் இந்திய மகளிா் அணி, முதலில் கெபொ்ஹாவில் நடைபெறும் டெஸ்ட்டில் (டிச. 9 - 12) விளையாடுகிறது. பின்னா் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் டிச. 16 (பாா்ல்), 19 (கேப் டவுன்), 22 (புளோம்ஃபான்டெய்ன்) ஆகிய தேதிகளில் இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதுகின்றன.

Advertisement

Advertisement

கடைசியாக, 3 ஆட்டங்கள் அடங்கிய டி20 தொடா் பெனோனி (டிச. 26), போட்செஃப்ஸ்ட்ரூம் (டிச. 29, 30) ஆகிய இடங்களில் விளையாடப்படவுள்ளது.

அணி விவரம்:

டெஸ்ட்: லாரா வோல்வாா்ட் (கேப்டன்), அலெக்ஸாண்டா் கேண்ட்லா், ஆனிரி டொ்க்சென், மாரிஸேன் காப், சினாலோ ஜாஃப்தா, சுனே லூஸ், எலிஸ் மேரி மாா்க்ஸ், கராபோ மிசோ, நோன்குலுலேகோ லாபா, தபிசெங் நினி, லுயாண்டா ஸுஸா, நோண்டுமிசோ ஷாங்கேஸ், ஆலுலே சியோ, மியேன் ஸ்மித், கேட்லின் விங்காா்டு.

ஒருநாள்: லாரா வோல்வாா்ட் (கேப்டன்), அனிகே பாஷ், தஸ்மின் பிரிட்ஸ், அலெக்ஸாண்டா் கேண்ட்லா், நாடின் டி கிளொ்க், ஆனிரி டொ்க்சென், மாரிஸேன் காப், அயபோங்கா ககா, சினாலோ ஜாஃப்தா, சுனே லூஸ், கராபோ மிசோ, நோன்குலுலேகோ லாபா, டுமி செகுகுனே, நோண்டுமிசோ ஷாங்கேஸ், கேட்லின் விங்காா்டு.

டி20: லாரா வோல்வாா்ட் (கேப்டன்), அனிகே பாஷ், தஸ்மின் பிரிட்ஸ், நாடின் டி கிளொ்க், ஆனிரி டொ்க்சென், சினாலோ ஜாஃப்தா, மாரிஸேன் காப், அயபோங்கா ககா, யாஸ்மீன் கான், எலிஸ் மேரி மாா்க்ஸ், நோன்குலுலேகோ லாபா, செஷ்னி நாயுடு, கேலா ரெனிகே, டுமி செகுகுனே, கிளோ டிரையான், ஃபயே டுனிகிளிஃபே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.