டபிள்யூடிசி புள்ளிப் பட்டியல்: முதலிடத்தை பலப்படுத்திய தென்னாப்பிரிக்கா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் தென்னாப்பிரிக்கா குறித்து...

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (டபிள்யூடிசி) புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பலப்படுத்தியது தென்னாப்பிரிக்க அணி. கேப்டன் டெம்பா பவுமா இல்லாமலேயே வென்று அசத்தியது.
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக வென்றுள்ளது. அதிலும் கடைசி டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 219 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
இந்த வெற்றியுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. 77.78 சதவிகித புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
Advertisement
Advertisement
இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட் சமனில் முடிந்ததால் நியூசிலாந்து இந்தப் பட்டியலில் கீழிறங்கியது. இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது.
நடப்பு சாம்பியனான தென்னாப்பிரிக்கா மீண்டும் கோப்பை வெல்லும் முனைப்புடன் விளையாடி வருகிறது. பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறது.
டபிள்யூடிசி புள்ளிப் பட்டியல்
1. தென்னாப்பிரிக்கா - 77.78 சதவிகிதம்
2. ஆஸ்திரேலியா - 69.23 சதவிகிதம்
3. நியூசிலாந்து - 66.67 சதவிகிதம்
4. இந்தியா - 50.00 சதவிகிதம்
5. இங்கிலாந்து - 27.38 சதவிகிதம்
டாப் 2வில் முடிக்கும் இரண்டு அணிகளே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான இறுதிப் போட்டியில் மோதும். இந்தப் போட்டி அடுத்தாண்டு ஜூன் 9-13ல் ஓவல் திடலில் நடைபெற இருக்கிறது.