முகப்பு

வியான் முல்டர் 7 விக்கெட்டுகள்: வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக வென்ற தெ.ஆ.!

தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி குறித்து...

வியான் முல்டர் 7 விக்கெட்டுகள்: வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக வென்ற தெ.ஆ.!
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் வியான் முல்டர் - AP Photo/ Themba Hadebe
பகிர்:

தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் இடையேயான கடைசி டெஸ்ட் நான்காம் நாளான இன்று முடிவுக்கு வந்துள்ளது. தென்னாப்பிரிக்க அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 91 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென்னாப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 494/7 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.

வங்கதேசம் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 49.4 ஓவர்களில் 184 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக தவ்ஹித் ஹிரிதோய் 41, மஹ்ஃபிஜுல் இஸ்லாம் 38 ரன்கள் எடுத்தார்கள்.

Advertisement

Advertisement

தென்னாப்பிரிக்காவின் சார்பில் வியான் முல்டர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவர் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்ததும் கவனிக்கத்தக்கது.

இன்னிங்ஸ் மற்றும் 219 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா இந்தப் போட்டியில் வென்றது. இத்துடன் டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக வென்றது.

இந்தப் போட்டியில் ஆட்ட நாயகனாக வியான் முல்டரும் 307 ரன்கள் எடுத்த மார்கஸ் ஆக்கர்மேன் தொடர் நாயகனாகவும் தேர்வானார்கள்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனாக இருக்கும் தென்னாப்பிரிக்கா மீண்டும் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் அபாரமாக விளையாடி வருகிறது.

summary

Wiaan Mulder takes 7 wickets: South Africa completes a clean sweep of the Test series against Bangladesh!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.