முதல் டெஸ்ட்: வங்கதேசத்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜோஹன்ஸ்பெர்க்கில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்க அணி அதன் முதல் இன்னிங்ஸில் 557 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதனையடுத்து, தென்னாப்பிரிக்காவைக் காட்டிலும் 157 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேசம் இரண்டாவது இன்னிங்ஸில் 168 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
Advertisement
Advertisement
அந்த அணியில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 39 ரன்களும், மஹ்ஃபிஜுல் இஸ்லாம் 32 ரன்களும் எடுத்தனர். தௌகித் ஹிரிடாய் 23 ரன்கள், முஷ்பிகர் ரஹீம் 22 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.
தென்னாப்பிரிக்கா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய சிமோன் ஹார்மர் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அவரைத் தொடர்ந்து, ககிசோ ரபாடா 3 விக்கெட்டுகளையும், மார்கோ யான்சென் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேசம் 168 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்காவுக்கு வெறும் 12 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தென்னாப்பிரிக்க அணி 1.3 ஓவர்களில் இந்த இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட ககிசோ ரபாடாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
South Africa secured a resounding 9-wicket victory over Bangladesh in the first Test match.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.