FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பேட்டிங், பந்துவீச்சில் அசத்தும் ரபாடா: வெற்றிக்கு அருகில் தென்னாப்பிரிக்கா!

தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட்டின் கடைசி நாள் ஆட்டம் குறித்து...

நடுவரிடம் விக்கெட் கேட்கும் ககிசோ ரபாடா - படம்: ஏபி
பகிர்:

ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றுவரும் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்க அணி வெற்றிக்கு அருகில் முன்னேறியுள்ளது.

கடந்த நவ.15ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 400 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அடுத்ததாக தென்னாப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 557 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 157 ரன்கள் பின்னிலையில் இருந்து வங்கதேசம் தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.

Advertisement

Advertisement

போட்டியின் கடைசி நாளான இன்று தொடக்கத்திலேயே வங்கதேசம் ஒரு விக்கெட்டை இழந்து, 152/6 ரன்கள் எடுத்துள்ளது. 5 ரன்கள் பின்னிலையில் இருக்கும் இந்த அணி தோல்வியில் இருந்து தப்பிக்க, விக்கெட்டுகளை இழக்காமல் இருக்க வேண்டும்.

தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 4 விக்கெட்டுகள் தேவையாக இருக்கிறது. இரண்டாவது இன்னிங்ஸில் 100 ரன்கள் இலக்காக வந்தாலும் சேஸ் செய்து வெல்லும் முனைப்புடன்தான் அந்த விளையாடி வருகிறது.

சமனில் முடியுமா அல்லது தென்னாப்பிரிக்கா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ககிசோ ரபாடா சிறப்பாக பந்துவீசி வருகிறார். முதல் இன்னிங்ஸில் பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளும் பேட்டிங்கில் 72 ரன்களும் எடுத்தார்.

தற்போது, இரண்டாவது இன்னிங்ஸில் ரபாடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தப் போட்டியில் வென்றால் ஆட்ட நாயகன் விருது அவருக்குக் கிடைக்க அதிகமான வாய்ப்பு இருக்கிறது.

summary

Rabada shines with bat and ball: South Africa close to victory at Johannesburg!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.