2-வது டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு; 91 ரன்களுக்கு ஆட்டமிழந்த வங்கதேசம்!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 91 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 91 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நேற்று (நவம்பர் 23) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் விளையாடியது.
தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு; 91 ரன்களுக்கு ஆட்டமிழந்த வங்கதேசம்!
Advertisement
Advertisement
முதலில் விளையாடிய வங்கதேசம் தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 33.3 ஓவர்களில் 91 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மஹ்ஃபிஜுல் இஸ்லாம் அதிகபட்சமாக 23 ரன்கள் எடுத்தார். தௌஹித் ஹிரிடாய் 19 ரன்கள் மற்றும் மோமினுல் ஹேக் 18 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
தென்னாப்பிரிக்கா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ககிசோ ரபாடா மற்றும் மார்கோ யான்சென் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஆன்ரிச் நோர்கியா இரண்டு விக்கெட்டுகளையும், வியான் முல்டர் மற்றும் சிமோன் ஹார்மர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
வலுவான நிலையில் தென்னாப்பிரிக்கா!
வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 91 ரன்களுக்கு ஆட்டமிழந்ததையடுத்து, முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் தென்னாப்பிரிக்க அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களுக்கும் அதிகமாக எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
கேப்டன் அய்டன் மார்க்ரம் 21 ரன்களிலும், ஸுபையர் ஹம்சா 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்க்யூஸ் அக்கர்மேன் சதம் விளாசி அசத்தினார். அவர் 100 ரன்களைக் கடந்து விளையாடி வருகிறார். அவருடன் டோனி டி ஸார்ஸி களத்தில் உள்ளார்.