முகப்பு

டெஸ்ட் கிரிக்கெட்டில் கிளன் பிலிப்ஸ் முக்கியமான வீரராக உருவெடுத்துள்ளார்: டாம் லாதம்

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர் கிளன் பிலிப்ஸ் முக்கியமான வீரராக உருவெடுத்துள்ளதாக நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் கிளன் பிலிப்ஸ் முக்கியமான வீரராக உருவெடுத்துள்ளார்: டாம் லாதம்
கிளன் பிலிப்ஸ் - படம் | நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
பகிர்:

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர் கிளன் பிலிப்ஸ் முக்கியமான வீரராக உருவெடுத்துள்ளதாக நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், நாளை (நவம்பர் 27) கிறிஸ்ட் சர்ச்சில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர் கிளன் பிலிப்ஸ் முக்கியமான வீரராக உருவெடுத்துள்ளதாக நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த சில மாதங்களாக நியூசிலாந்து அணிக்காக கிளன் பிலிப்ஸ் மிகவும் நன்றாக விளையாடி வருவதாக நினைக்கிறேன். அதிலும் குறிப்பாக, டெஸ்ட் போட்டிகளில் அவர் மிகவும் முக்கியமான வீரராக மாறியுள்ளார். பந்துவீச்சிலும் அவர் அணிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்குகிறார். டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமின்றி, வெள்ளைப் பந்து போட்டிகளிலும் அவர் அணிக்கு முக்கியமான வீரர். ஆட்டத்தை நன்கு புரிந்துகொண்டு விளையாடக் கூடிய அவரைப் போன்ற வீரர் அணியில் இருப்பது எங்களுக்கு மிகவும் முக்கியம் என்றார்.

நியூசிலாந்து அணிக்காக இதுவரை 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கிளன் பிலிப்ஸ் 1100 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 39.28 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 66.30 ஆகவும் உள்ளது. அதில் இரண்டு சதங்கள் மற்றும் 5 அரைசதங்கள் அடங்கும். அவர் 36 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

இந்த ஆண்டு மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கிளன் பிலிப்ஸ் 81.25 என்ற சராசரியுடன் 325 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

New Zealand captain Tom Latham has stated that all-rounder Glenn Phillips has emerged as a key player in Test cricket.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.