FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அசத்திய பும்ரா: 170* ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் ஹென்றி நிகோலஸ் - க்ளென் பிலிப்ஸ்!

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி குறித்து...

23 வினாடிகள் முன்பு
ஹென்றி நிகோலஸ் - க்ளென் பிலிப்ஸ் - படம்: எக்ஸ் / பிளாக்கேப்ஸ்
பகிர்:

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்குத் தொடங்கியது.

டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 52 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை நியூசிலாந்து பின்னர் மெதுவாக நிலைத்து ஆடியது. 72 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்த நிலையில் க்ளென் பிலிப்ஸ் களத்தில் இறங்கினார்.

Advertisement

Advertisement

ஹென்றி நிகோலஸ் - க்ளென் பிலிப்ஸ் கூட்டணி இந்தியாவின் பந்துவீச்சைத் தாங்கி ரன்களைக் குவிக்க ஆரம்பித்தது. தற்போது, நியூசிலாந்து அணி 80.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்துள்ளது.

ஹென்றி நிகோலஸ் 109* ரன்களுடனும் க்ளென் பிலிப்ஸ் 91* ரன்களுடனும் விளையாடி வருகிறார்கள். இந்தக் கூட்டணி 311 பந்துகளில் 170 ரன்கள் குவித்துள்ளது.

ஹென்றி நிகோலஸ் தனது 12ஆவது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்துள்ளார். விக்கெட்டுகள் விழுந்த வந்த நிலையில் மறுபக்கம் பொறுப்புடன் விளையாடி வருகிறார்.

இந்தியா சார்பில் பும்ரா 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அன்ஷுல் கம்போஜ், ஆகாஷ் தீப் தலா ஒரு விக்கெட் எடுத்தார்கள். சுழல் பந்துவீச்சாளர் வாஷிங்டன் சிந்தர், வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா விக்கெட் எடுக்காமல் பந்துவீசி வருகிறார்கள்.

summary

Bumrah shines: Henry Nicholls and Glenn Phillips pair up in defense!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.