டாம் லாதம், டாம் பிளண்டெல் அரைசதம்: முதல் நாளில் 246 ரன்கள் சேர்த்த நியூசிலாந்து!
இந்தியா - நியூசிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி குறித்து...

இந்தியா - நியூசிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி இன்று அதிகாலை இந்திய நேரப்படி 3.30 மணிக்கு கிறிஸ்ட்சர்ச் திடலில் தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தப் போட்டியிலும் முகமது சிராஜ் தேர்வு செய்யப்படாதது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஆகாஷ் தீப் 2, குர்னூர், அன்ஷுல், வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.
Advertisement
Advertisement
நியூசிலாந்து சார்பில் தொடக்க வீரர் டாம் லாதம் இந்தமுறை பும்ராவிடம் டக் அவுட் ஆட்டமிழக்கவில்லை; நிதானமாக விளையாடி அரைசதம் அடித்து 59 ரன்களில் ஆகாஷ் தீப் ஓவரில் ஆட்டமிழந்தார்.
கான்வே 39 ரன்கள், ஹென்றி நிகோலஸ் 16 ரன்கள், டேரில் மிட்செல் 31 ரன்கள், ரச்சின் ரன் ஏதுமின்றி டக் அவுட் ஆனார். பின்னர் க்ளென் பிலிப்ஸ் - டாம் பிளண்டெல் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினார்கள்.
இந்த பார்ட்னர்ஷிப் 122 பந்துகள் விளையாடி 62 ரன்கள் எடுத்தனர். இதில் டாம் பிளண்டெல் 53*, பிலிப்ஸ் 36* ரன்களுடன் இருக்கும்போது முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
முதல் போட்டி சமனில் முடிந்ததால், இந்தப் போட்டியில் யார் வெல்லுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 3,4ஆவது இடத்தில் நியூசிலாந்து, இந்தியா இருப்பதும் கவனிக்கத்தக்கது.