125 - 135 கி.மீ/மணி வேகத்தில் மட்டுமே பந்துவீசும் பும்ரா..! காயத்தினால் அவதியா?
இந்தியாவின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா குறித்து...

இந்தியாவின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ராவின் உடல்நிலை குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
கிறிஸ்ட்சர்ச்சில் திடலில் தொடங்கிய கடைசி டெஸ்ட்டில் இந்தியா டாஸ் வென்று பந்துவீசியது. முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 246 ரன்கள் எடுத்தது.
இந்தப் போட்டியில் ஜஸ்ப்ரீத் பும்ரா 19 ஓவர்கள் வீசி விக்கெட் ஏதுமின்றி, 4 மெய்டன்கள், 37 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஆகாஷ் தீப் 2, மற்ற வீரர்கள் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் ஜஸ்ப்ரீத் பும்ராவின் வேகம் பேசுபொருளாகியுள்ளது. பொதுவாக பும்ரா 140-145 கி.மீ./மணி வேகத்தில் பந்துவீசும் ஆற்றல் கொண்டவர். ஆனால், அவரால் நீண்ட நேரத்துக்கு இதே வேகத்தில் பந்துவீச முடியாமல் திணறி வருகிறார்.
இந்தப் போட்டியில் அதிகபட்சமாக அவர் 125 -130 கி.மீ./மணி வேகத்தில் பந்துவீசினார். சராசரியாக 128-130 கி.மீ./மணி வேகத்தில் இருந்தது. சிலமுறை பந்துவீச்சு முறையிலும் வித்தியாசமாக ஓடி வந்து வீசினார். அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இரண்டாம் நாளில் இன்னும் அவர் அதிகமாக பந்துவீச வேண்டியிருக்கும். முகமது சிராஜ் ஐந்தாம் நாளிலும் 145 கி.மீ./மணி வேகத்தில் பந்துவீசும் ஆற்றல் கொண்டவர். சமூக வலைதளத்தில் இந்தியாவின் பயிற்சியாளர்களின் தேர்வு குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
பும்ரா விக்கெட் எடுக்காததால், இந்தியா இந்தப் போட்டி நியூசிலாந்துக்கு சாதகமாக மாறிவருகிறது. முதல் போட்டியில் கடைசி நாளில் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் இந்தியா திணறியது நினைவுகூரத்தக்கது.