அழகிய நட்பு... இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக்கிற்கு ஆஸ்திரேலிய சிறுவன் எழுதிய கடிதம்!
இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக்கிற்கு ஆஸ்திரேலிய சிறுவன் எழுதிய கடிதம் குறித்து...

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹாரி புரூக்கிற்கு பால் ஜேக் என்ற ஆஸ்திரேலிய சிறுவன் எழுதிய கடிதம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்து ஒருநாள் தொடரை வென்றது. தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
சில நாள்களுக்கு முன்பாக ஹாரி புரூக் அடித்த சிக்ஸரால் அரங்கில் இருந்த சிறுவன் மீது விழுந்தது. போட்டிக்குப் பிறகு ஹாரி புரூக் அந்தச் சிறுவனைச் சந்தித்து அவரது கையுறையை அளித்திருந்தார்.
Advertisement
Advertisement
ஹாரி புரூக்கின் இந்தச் செயல் பலரையும் நெகிழச் செய்தது. டி20 தொடரில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகித்துள்ளது. இந்த நிலையில், அந்தச் சிறுவன் ஹாரி புரூக்கிற்குக் கடிதம் எழுதியுள்ளான்.
அந்தக் கடிதத்தை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பகிர்ந்துள்ளது. அதில் இருப்பதாவது:
டியர் ஹாரி, சனிக்கிழமை இரவு டி20 போட்டியின்போது எனக்கு நீங்கள் கையுறை அளித்ததுக்கு நன்றி தெரிவிக்க கடிதம் எழுதியுள்ளேன். நான் தற்போது நன்றாக இருக்கிறேன். ஞாயிறு காலை கிரிக்கெட் விளையாடினேன். பேட்டிங் நன்றாகச் செய்தேன். ரிடையர்ட் ஹர்ட் ஆகவில்லை. மேலும் நான் ஒருவரை ஸ்டம்பிங் செய்தேன்!
அடுத்த போட்டி மற்றும் அடுத்த டெஸ்ட்டுக்கும் வாழ்த்துகள் ஹாரி. நீங்கள் விளையாடும் போதெல்லாம் உங்களை முடிந்த அளவுக்கு பின் தொடர்வேன். அடுத்தாண்டு எம்சிஜியில் 150ஆவது டெஸ்ட் போட்டியில் நீங்கள் விளையாட வரும்போது உங்களைச் சந்திப்பேன். உங்களது பால் ஜேக் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்தக் கடித்ததுக்குப் பதிலளித்த ஹாரி புரூக்,”எம்சிஜியில் சந்திப்போம்” எனக் கூறியுள்ளார். இந்தப் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.