FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பாகிஸ்தானில் விளையாட ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி மறுப்பு... முத்தரப்பு தொடர் ரத்து?

பாகிஸ்தானில் விளையாட ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி மறுப்பு தெரிவித்துள்ளதால் முத்தரப்பு தொடர் ரத்து செய்யப்படவுள்ளதைப் பற்றி...

ஜிம்பாப்வே வீரர்கள் - படம்: ஏபி.
பகிர்:

பாகிஸ்தானில் விளையாட ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி மறுப்பு தெரிவித்துள்ளதால் முத்தரப்பு தொடர் ரத்து செய்யப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் அடுத்தாண்டு (2027) தென்னாப்பிரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வேயில் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட முன்னணி அணிகள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு ஒருநாள் தொடர்களிலும் விளையாடி வருகின்றன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஜிம்பாப்வே, பாகிஸ்தான், அயர்லாந்து உள்ளிட்ட அணிகள் பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாட திட்டமிட்டிருந்தன.

இந்தத் தொடரில் விளையாட பாகிஸ்தானுக்குச் செல்ல ஜிம்பாப்வே அணி மறுப்பு தெரிவித்துள்ளதால், இந்தத் தொடர் நடைபெறாது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

அயர்லாந்தும் ஜிம்பாப்வேயும் 2027 ஜனவரியில் பாகிஸ்தானில் இந்தத் தொடரில் விளையாடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இருதரப்பு ஒருநாள், டி20 தொடராக மாற்றப்படலாம் என்ற தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், அதற்கான வாய்ப்புகளும் இல்லை என்ற தகவல்கள் கிடைத்துள்ளன.

இதற்கிடையில், அயர்லாந்து அணி, அக்டோபர் - நவம்பர் மாதங்களில் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதை நோக்கமாகக் கொண்டு பிப்ரவரியில் நடைபெறும் தகுதிச்சுற்றுப் போட்டிகளில் விளையாடவிருக்கிறது. மேலும், பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர், உலகக் கோப்பைக்குத் தயாராவதற்கு உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

summary

A triangular ODI series scheduled to be played in Pakistan early next year is set to be scrapped, with Zimbabwe not expected to take part. Zimbabwe's involvement is understood to have fallen through due to commercial reasons, and both parties are believed to be working on an alternate window.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments