FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பாக். போலீஸ் வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்! 10 அதிகாரிகள் பலி!

பாகிஸ்தானில் காவல்துறை வாகனங்களின் மீது பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 10 அதிகாரிகள் கொலை...

பயங்கரவாதத் தாக்குதல்... - கோப்புப் படம்
பகிர்:

பாகிஸ்தானில், காவல் துறையினர் வாகனங்களின் மீது பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 10 அதிகாரிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைபர் பக்துன்குவா மாகாணத்தின் கோஹட் மாவட்டத்தில் புதன்கிழமை (நவ. 11) காவல் துறையினர் சென்ற வாகனங்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக காவல் துறையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2 மூத்த காவல் அதிகாரிகள் உள்பட 10 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் உடனான எல்லை அருகே நடைபெற்ற இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், ஆப்கன் தலிபான்களின் ஆதரவில் செயல்படும் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) எனும் பயங்கரவாத அமைப்பு இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

முன்னதாக, ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் தலைமையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சி அமைந்தது முதல் பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலுக்கு டிடிபி அமைப்புதான் காரணம் எனவும், பயங்கரவாதிகளுக்கு ஆப்கன் அரசு ஆதரவளிப்பதாகவும் பாகிஸ்தான் அரசு தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

summary

In Pakistan, 10 police officers have reportedly been killed in a surprise attack by terrorists on police vehicles.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.