எதிர்காலத்தில் ஒருநாள் போட்டிகளில் 500 ரன்களையும் சேஸ் செய்ய முடியும்: டுவைன் பிராவோ
எதிர்காலத்தில் ஒருநாள் போட்டிகளில் 500 ரன்களையும் சேஸ் செய்ய முடியும் என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் ஒருநாள் போட்டிகளில் 500 ரன்களையும் சேஸ் செய்ய முடியும் என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார்.
உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின்போது, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர்களான கிறிஸ் கெயில் மற்றும் டுவைன் பிராவோ இருவரும் தற்போது வேகமாக வளர்ந்து வரும் கிரிக்கெட் குறித்து அவர்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
அப்போது பேசிய டுவைன் பிராவோ, வீரர்களின் பேட்டிங் அணுகுமுறை வேகமாக மாறி வருவதால் பந்துவீச்சாளர்கள் அவர்களது திறமையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், எதிர்காலத்தில் ஒருநாள் போட்டிகளில் 500 ரன்களையும் சேஸ் செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பேட்டர்களின் திறமை அதிகரித்துள்ளது. பேட்டர்களுக்கு சவால் அளிக்கும் விதத்தில் பந்துவீச்சாளர்களும் புதுமையாக தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. உலக கிரிக்கெட்டில் பல மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அதற்கேற்றவாறு, பந்துவீச்சாளர்கள் அவர்களது திறமையை மேலும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். உலகம் முழுவதும் பேட்டிங் அணுகுமுறை மிகப் பெரிய அளவில் மாறியுள்ளது. நல்லவேளை நான் விளையாடிய நாள்கள் முடிந்துவிட்டன என்றார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
Former West Indies player Dwayne Bravo has stated that it is possible to chase down 500 runs in One Day Internationals in the future.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.