இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்: பாகிஸ்தான் அணியில் அதிரடி மாற்றங்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்டுக்கான பாகிஸ்தான் அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்டுக்கான பாகிஸ்தான் அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. லண்டன் லார்ட்ஸ், லீட்ஸ் ஹெட்டிங்லே திடல்களில் நடைபெற்ற போட்டிகள் முறையே இன்னிங்ஸ் - 103 ரன்கள் மற்றும் 194 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி படுதோல்வியைச் சந்தித்தது. இவ்விரு அணிகளும் மோதும் 3-ஆவது மற்றும் கடைசிப் போட்டி பிர்மிங்காம் எட்ஜ்பேஸ்டனில் வருகிற செப். 3 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
இங்கிலாந்துக்கு எதிரான தொடர் தோல்வி எதிரொலியாக இந்தத் தொடருக்கு முன்னதாக பாகிஸ்தான் அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தான் டெஸ்ட் பயிற்சியாளர்கள் சர்ஃபாஸ் அகமத், உமர் குல்லை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கம் செய்துள்ளது.
Advertisement
Advertisement
அவர்களுக்குப் பதிலாக மைக் ஹெசன், ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷ்லே நோஃப்கே ஆகியோர் பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நட்சத்திர வீரர்கள் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான், இமாம்-உல்-ஹக், சல்மான் அலி ஆகா, அலி உஸ்மான் மற்றும் குர்ரம் ஷஹ்சாத் ஆகிய 5 வீரர்கள் தொடரிலிருந்து நீக்கப்பட்டு, அதேவேளை, போட்டிகளில் விளையாடாமலேயே ஆமிர் ஜமால் மற்றும் முகமது அவைஸ் ஜாஃபர் உள்ளிட்ட 7 பேரும் நாடு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர்.
ஆல்ரவுண்டர் சைம் அயூப் மற்றும் அப்துல்லா ஃபசல் ஆகியோருடன் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் அராஃபத் மின்ஹாஸ், வேகப்பந்து வீச்சாளர் முகமது இம்ரான் ஜூனியர், விக்கெட் கீப்பர் சையீத் பெய்க் மற்றும் ஆல் ரவுண்டர்களான முகமது இம்ரான், ரஸவுல்லா ஆகியோருக்கு முதல்முறையாக பாகிஸ்தான் அணியில் இடம் கிடைத்துள்ளது.
இங்கிலாந்து தொடருக்கான பாகிஸ்தான் அணி
பாபர் அசாம் (கேப்டன்)
அப்துல்லா ஃபசல்
அப்துல்லா ஷபிக்
அராபத் மின்ஹாஸ்
அசான் அவாய்ஸ்
முகமது அப்பாஸ்
முகமது அலி
முகமது இம்ரான்
முகமது இம்ரான் ஜூனியர்
முகமது காஸி கோரி
ரஸுல்லா
சாத் பெய்க்
சையிம் அயூப்
சஜித் கான்
சௌத் ஷகீல்
ஷான் மசூத்
உபைத் ஷா
The Pakistan Cricket Board (PCB) has taken big steps after the side’s poor performance against England in the ongoing Test series. Pakistan has already lost the three-match Test series 2-0 and will now look to avoid a whitewash in the final game.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.